Cyclone Alert : இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! புயலாக வலுப்பெறுமா.? எங்கே கரையை கடக்கும்? வெதர்மேன் அலர்ட்

Cyclone Alert  :  இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! புயலாக வலுப்பெறுமா.? எங்கே கரையை கடக்கும்? வெதர்மேன் அலர்ட்
News Image

விடை பெறும் தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டு விட இந்தாண்டு குறைவான அளவே பெய்துள்ள நிலையில், பல இடங்களில் இயல்பை காட்டிலும் குறைவான அளவே மழை பெய்துள்ளது. இதனால் இந்தாண்டு மேட்டூர் அணையில் நிரம்பாத நிலையிலும் தண்ணீரானது விவசாயத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படிப்படியாக அக்டோபர் 2வது வாரத்தில் முழுமையாக தென்மேற்கு பருவமழை இந்தியாவை விட்டு விலகும் என கணிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில் தற்போது வங்க கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள் மாவட்டங்களில் வெப்ப சலனத்தின் காரணாக இடி மழை பெய்து வருகிறது. அந்தமானை ஒட்டிய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி நீடிக்கிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கவுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமானில் பகுதியில் இருந்து தமிழகம் வரை நீடித்து நிற்கிறது. சாதகமான காற்று குவிதல் காரணமாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மீது விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

இதன் தாக்கத்தால் தற்போது உள் மாவட்டங்களில் பெய்து வரும் இடி மழை, கடலோர மாவட்டங்களிலும் அதிகரிக்கும். செப்டம்டர் 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒட்டு மொத்த தமிழகத்திலும் மழை தீவிரம் அடையும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், வட உள் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்கலிலும், தென் மாவட்டங்களிலும் பலத்த இடி, மின்னலோடு மழை பெய்யும் என வானிலை டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

புயலாக வலுப்பெறுமா.?

இன்று உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார். 23 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்தாக புயலாகவும் மாற வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் புயல் உருவாகுவது அரிதானது என்ற அவர், கடந்த 25 ஆண்டில் 3 புயல் மட்டுமே உருவாகியிருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றால் 4வது புயலாக உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

புயல் எங்கே கரையை கடக்கும்.?

இந்த புயல் வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். அதே நேரம் தமிழகத்திற்கு இந்த புயலால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தவர், அதே நேரம் வெப்ப சலனத்தால் இடியுடம் கூடிய கன மழைக்கான சாதகமாக சூழல் உருவாகும் என டெல்டா வெதர்மேன் குறிப்பிட்டார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks