ChatGPT பயன்படுத்தி தேர்வு எழுத முயன்று மாட்டிய மாணவர்.. கல்லூரி விடுதியில் விபரீத முடிவு!

ChatGPT பயன்படுத்தி தேர்வு எழுத முயன்று மாட்டிய மாணவர்.. கல்லூரி விடுதியில் விபரீத முடிவு!
News Image

மகாராஷ்ட்ராவில் தேர்வில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிடிபட்ட மாணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் போராட்டங்கள் வெடித்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் செயல்படும் ஐஐடி கல்வி நிறுவனத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு Energy Science and Engineering  என்ற பாடப்பிரிவில் இரண்டாம் படிக்கும் மாணவரான  சாஹில் வக்கோடே என்பவர் தேர்வு நடைபெற்றபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக பிடிபட்டார். அதாவது தேர்வறையில் செல்போனை பயன்படுத்தி அதனை சாட்ஜிபிடியில் பதிவேற்றி கேள்விகளுக்கான பதிலை பெற்றதாக சொல்லப்படுகிறது.

கையும் களவுமான  சாஹில் வக்கோடே பிடிபட்ட நிலையில் விடுதிக்கு திரும்பிய அவர் தனது அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை ஐஐடி இந்த இறப்பு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனால் தாங்கள் மிகுந்த வருத்தம் அடைவதாக தெரிவித்தது. இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவரின் நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிறருக்கு கல்வி நிறுவனம் ஆழ்ந்த இரங்கல்கள்.இந்த மரணம் தொடர்பாக உரிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நிர்வாகம் தரப்பில் சொல்லப்படும்போது, சாஹில் வக்கோடே பிடிபட்ட நிலையில் அவர் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அவரது பேராசிரியர், துறைத்தலைவர் ஆகியோரை வைத்து சாஹில் வக்கோடேவுக்கு ஆலோசனைகள் வழங்கி இனிமேல் கல்வி வாழ்க்கை பாதிக்காமல் நடக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேசமயம் சாஹில் வக்கோடே தற்கொலை செய்துக் கொண்டதை அறிந்த சக மாணவர்கள் ஐஐடி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான உண்மை தகவல்களை அதிகாரிகள் மறைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தேர்வில் முறைகேடு செய்யப்பட்டதால் சாஹில் வக்கோடேவை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்வோம் என மிரட்டல் விடுக்கப்பட்டது. அவ்வாறு சஸ்பெண்ட் ஆனால் ஹாஸ்டலை காலி செய்து விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலை இருந்திருக்கும். இதனால் படிப்பு பாதிக்கப்படுவதோடு கல்வியாண்டின் கால அளவும் அதிகரிக்கும். இத்தகைய அழுத்தமே சாஹில் வக்கோடே தற்கொலை செய்ய காரணமாக இருந்திருக்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை ஐஐடியில் கடந்த 7 மாதங்களில் நடந்த 3வது தற்கொலை சம்பவம் இதுவாகும். 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஜூலை மாதத்தின் புதிய செமஸ்டர் தொடங்கிய நிலையில் இரண்டாம் ஆண்டு பி.டெக் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks