Tamil Nadu New Secretariat: புதிய தலைமை செயலகம் அமைக்க தமிழ்நாடு அரசு பரிசீலிப்பதாக கூறப்படும் பகுதி தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

தலைவலியான பட்டினப்பாக்கம்:

இடநெருக்கடி, எதிர்கால பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார். மெரினா கடற்கரை அருகே பட்டினப்பாக்கத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஃபோர்ஷேர் எஸ்டேட் பகுதியில், இதற்கான பூர்வாங்க பணிகளை அமைக்க அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த இடத்தில் தலைமை செயலகத்தை அமைப்பது அந்த இடத்தை மேலும் மோசமானதாக மாற்றும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், தமிழ்நாடு அரசுக்கு பட்டினப்பாக்கம் இடம் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்நிலையில் தான் அரசு மாற்று இடங்களை பரிசீலிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் ரூட் எடுத்த CM விஜய்?

20 ஆண்டுகளுக்கு முன்பாக புதிய நிர்வாக நகர திட்டம் ஒன்றை அமைக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டார். இதற்காக அவர் பரிசீலித்த திருவிடந்தை இடம் தான், தற்போது மீண்டும் புதிய சட்டமன்றம் மற்றும் செயலக வளாகத்திற்கான மாற்று இடமாக பரிசீலிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த அதிகாரிகளிடம் விசாரிக்கையில் அத்தகைய எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று ஒரு மூத்த அதிகாரி மறுத்துள்ளார். ஆனால், ஃபோர்ஷோர் எஸ்டேட் திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் அரசியல் கட்சிகளும் மீனவர் அமைப்புகளும், அரசு ஒரு தனி சட்டமன்றம் மற்றும் செயலக வளாகத்தைத் தாண்டி, மாநிலத்தின் நீண்டகால இடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்திற்கான விசாலமான இடத்தை அடையாளம் காண வேண்டும் என்று வாதிட்டுள்ளன. அதற்கு கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதி அத்தகைய ஒரு மாற்று வழியை வழங்கக்கூடும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

2000 ஏக்கர் பரப்பளவில் நிர்வாக நகரம்:

பட்டினப்பாக்கத்திற்கான எதிர்ப்புகளானது. திருவிடந்தை-தையூர் பகுதியில் ஓர் நிர்வாக நகரத்தை நிறுவ ஜெயலலிதா அரசு மேற்கொண்ட முந்தைய முயற்சி, இந்த பகுதியில் கணிசமான அளவு அரசு நிலம் இருப்பது மற்றும் ஃபோர்ஷோர் எஸ்டேட் மாற்றுக்கான தற்போதைய தேவை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 2000-களின் முற்பகுதியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, சென்னைக்கு வெளியே ஒரு பெரிய நிர்வாக நகரத்தை நிறுவுவது குறித்து பரிசீலித்தார். ஆரம்பத்தில் மாமல்லபுரத்திற்கு அருகில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவைக் கருத்தில் கொள்ளப்பட்டு, பின்னர் திருவிடந்தை மற்றும் அதன் அருகிலுள்ள தையூர் மீது கவனம் செலுத்தப்பட்டது. இங்கு புதிய தலைமை செயலகம் மட்டுமின்றி அரசு அலுவலகங்கள் மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு நிர்வாக மையத்தை நிறுவவும் திட்டமிட்டார்.

திட்டம் கைவிடப்பட்டது ஏன்?

அதேநேரம், அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கான பெரிய நகரத்தை உருவாக்க 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டதால் அந்த திட்டம் அப்படியே கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புதிய செயலகத்திற்காக சென்னைக்குள் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி, ராண்இ மேரி கல்லூரி உள்ளிட்ட இடங்களை அரசு ஆய்வு செய்தது. அடுத்த 100 ஆண்டுகளுக்கு மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்றால், சென்னைக்கு வெளியே 500 முதல் 1,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை நிறுவ வேண்டும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்: NirmalKumar: யாரிடம் காசு வாங்கினார்கள்? ஜெம் க்ராணைட் வீரமணி விவகாரம் - ஸ்டாலினுக்கு அமைச்சர் கேள்வி

உட்கட்டமைப்பு வசதிகள்:

தலைமை செயலக வளாகம் அல்லது ஒரு பெரிய நிர்வாக நகரத்தின் இருப்பிடம் குறித்த எந்தவொரு முடிவும், நிலம் கிடைப்பதையும் தாண்டிய பல்வேறு பரிசீலனைகளை உள்ளடக்கியிருக்கும். இத்தகைய வசதிகள் பல பத்தாண்டுகளுக்கு நிலைத்து இருந்து அரசு நிர்வாக இயந்திரத்திற்கான மையமாக இருக்க வேண்டும் என்பதால், இணைப்பு வசதி, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்பு மற்றும் பேரிடர்களைத் தாங்கும் திறன் போன்ற காரணிகளும் இடத் தேர்வுச் செயல்முறைக்கு முக்கியமானவையாக இருக்கும். எனவே, முதலமைச்சஎ விஜய் தலைமையிலான அரசு என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Source: Read Full Article