விவசாயியாக பிறப்பேன் என சொன்ன முதலமைசர் விஜய், அவர்களின் பிரச்னைகளை கூட காது கொடுத்து கேட்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்த நெல் உற்பத்தியில் சம்பா சாகுபடி தான் அதிக பங்களிப்பை வழங்குகிறது. நடப்பாண்டு குறித்த நேரத்தில் மேட்டூர் அணை திறக்காதது, பருவமழை பொய்த்த காரணத்தால் சம்பா சாகுபடி இலக்கை அடைய முடியாது என விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செப்டம்பர் 30ம் தேதி மேட்டூர் அணையை திறங்கள் என பலமுறை வேண்டுகோள் வைத்தும், செப்டம்பர் 1ம் தேதியே தண்ணீர் திறந்து விட்டார் என குற்றம் சாட்டியிருந்தார். இந்த செய்தியை சுட்டிக்காட்டி உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

<iframe title=""பிரச்சாரத்துக்கு வராதீங்க!" கொந்தளித்த தாராபுரம் மக்கள்! விரட்டியடிக்கப்பட்ட தவெக வேட்பாளர்" src="https://www.youtube.com/embed/SlpmxqpSVSs" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா? இந்த டம்மி ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர். குறுவை சாகுபடிக்கு திறக்க வேண்டிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்காமல் முதலமைச்சர் விவசாயிகளை வஞ்சித்தார். இந்த சூழலில், “சம்பா சாகுபாடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்த பிறகு செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று விவசாயிகள் சொன்னதை ஏற்காமல், வெற்று விளம்பரத்துக்காக செப்டம்பர் 1-ஆம் தேதியே திறந்து வைத்தார்.

தற்போது அணைக்கான நீர்வரத்து 4000 கன அடி என குறைந்துவிட்ட நிலையில், அணையின் நீர் மட்டமும் 40 அடியை நோக்கி குறைந்து கொண்டு செல்கிறது. இதனால் கடை மடை வரை தண்ணீர் சேருவதும் - பயிரின் பூப்பு நேரத்தில் தண்ணீர் வருவதும் சந்தேகம் என்பதால், சம்பா சாகுபடியை திட்டமிட்டப்படி செய்ய முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறுவை சிறப்பு தொகுப்புக்கும், வறட்சி நிவாரணத்தும் வித்தியாசம் புரியாமல் பேசிய முதலமைச்சர், இன்றைக்கு பேப்பரை படித்திருந்தால் விவசாயிகளின் இந்த அவலநிலை புரிந்து இருக்கும். ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடியில் இறங்க வேண்டாம் என்று வேளாண் வல்லுநர்கள் கூறும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கி வைத்துள்ளது இந்த சர்கஸ் அரசாங்கம். அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறப்பேன் என்று வெற்று வசனங்களை பேசிய முதலமைச்சருக்கு, முழு பயிர்க்கடன் கேட்டுப் போராடும் விவசாயிகளை சந்திக்ககூட மனம் வரவில்லை.

திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் 5 நிமிடம் மட்டுமே அதிகார திமிரோடு பேசிவிட்டு சென்ற அமைச்சர்களை கண்டித்து அதற்கு ஒரு போராட்டம் நடத்தும் அளவில் தான் இந்த ரீல்ஸ் வெறி ஆட்சி இருக்கிறது. விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், வேளாண் பெருங்குடி மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடியையும் இந்த அரசு உடனே வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article