CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!

CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
News Image

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் கடத்திச் சென்ற கும்பல் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றபோது, உயிரைப் பணயம் வைத்து காரின் மேலே ஏறி சுமார் 32 கிலோமீட்டர் தொலைவு வரை துணிச்சலாக தலைமைக் காவலர் வேல்முருகன் துரத்திச் சென்றார்.

நேரில் பாராட்டிய விஜய்:

அவர் உயிரைப் பணயம் வைத்து துரத்திச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர.

இந்த நிலையில், தலைமைக் காவலர் வேல்முருகனை இன்று முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். தலைமைக் காவலர் வேல்முருகனிடம் அவர் எப்படி உயிரைப் பணயம் வைத்து இந்த துணிச்சலான செயலில் ஈடுபட்டார்? அந்த குற்றவாளிகளை எப்படி மடக்கிப் பிடித்தனர்? என்பது குறித்து கேட்டறிந்தார்.

Video - Chief Minister Joseph Vijay invited Head Constable Velmurugan to the Secretariat and felicitated him for his courageous efforts to prevent the smuggling of gutka in Coimbatore, risking his own life. https://t.co/iHEq7nmU4M pic.twitter.com/rucSBnkDgC
— Vignesh Theni (@Vignesh_twitz) September 29, 2026

முதலமைச்சருடனான இந்த சந்திப்பின்போது தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உடனிருந்தார். தலைமைக் காவலர் வேல்முருகனுக்கு வீர தீர செயலுக்கான பதக்கம் விரைவில் வழங்கப்படும் என்று கருதப்படுகிறது.

நடந்தது என்ன?

கோவையில் வேல்முருகன் காரின் மேல் ஏறி துரத்திச் சென்ற கும்பல் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்தனர். காரின் உள்ளே இருந்த 3 பேரையும் அவிநாசி நெடுஞ்சாலை அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

Chief Minister Joseph Vijay invited Head Constable Velmurugan to the Secretariat and felicitated him for his courageous efforts to prevent the smuggling of gutka in Coimbatore, risking his own life. pic.twitter.com/jpyAtRann8
— Vignesh Theni (@Vignesh_twitz) September 29, 2026

இதற்காக போலீசார் அந்த நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் செயற்கையாக போக்குவரத்து நெரிசலை உருவாக்கி அந்த காரைத் தடுத்து நிறுத்தினர். அப்போது காரில் இருந்து தப்பியோட அவர்கள் முயன்றபோது அவர்களைப் பிடித்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றச் செயலுக்கு கர்நாடக பதிவு எண் கொண்ட கார் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks