CM Vijay: தாராபுரம், மதுராந்தகத்தில் ஓட்டு கேட்கப்போகும் முதலமைச்சர் விஜய் - எப்போது தெரியுமா?

CM Vijay: தாராபுரம், மதுராந்தகத்தில் ஓட்டு கேட்கப்போகும் முதலமைச்சர் விஜய் - எப்போது தெரியுமா?
News Image

தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இடைத்தேர்தல்:

ஆளுங்கட்சியாக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தவெக சந்திக்கும் இடைத்தேர்தல் இதுவாகும். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் தவெக களமிறங்குகிறது. ஏனென்றால், தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தும் தவெக-விற்கு இந்த இடைத்தேர்தல் மிக மிக முக்கியமானது ஆகும்.

விஜய்யின் பரப்புரை எப்போது?

இந்த நிலையில், இந்த தொகுதியில் முக்கிய தலைவர்கள் யாரும் இதுவரை நேரடியாக பரப்புரையில் ஈடுபடாத நிலையில், தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் எப்போது பரப்புரையில் ஈடுபடுவார்? என்று தவெக தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

லண்டனில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விஜய் நாளை காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார். தமிழ்நாட்டிற்கு நாளை வரும் விஜய் விரைவில் பரப்புரையில் ஈடுபடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் அறிவித்துள்ளார். இடைத்தேர்தல் அக்டோபர் 6ம் தேதி என்பதால் தேர்தலுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு விஜய் பரப்புரையில் ஈடுபடுவார் என்று கருதப்படுகிறது.

ஐந்து முனை போட்டி:

இந்த தேர்தலில் தவெக-விற்கு போட்டியாக எதிர்க்கட்சியான திமுக, தொகுதியை பறிகொடுத்த அதிமுக, தவெக ஆட்சியைமக்க உறுதுணையாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் ஆகியோர் போட்டியாக களமிறங்கியுள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவருக்குமே தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதற்கு தவெக தரப்பிலே கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

முதலமைச்சர் விஜய் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?  என்ற எதிர்பார்ப்புடன் தொகுதி மக்கள் உள்ளனர். மேலும், ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ள கம்யூனிஸ்டே எதிர்த்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தவிர பிற கட்சிகள் அனைத்தும் பல்வேறு விவகாரங்களில் தவெக அரசுக்கு அழுத்தம் அளிப்பதுடன், அவர்கள் மீது அதிருப்தியிலும் உள்ளனர்.

பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் இந்த இடைத்தேர்தலில் களமிறங்கும் தவெக-விற்கு ஆதரவாக விஜய்யின் பரப்புரை எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. விரைவில் அவரது தேர்தல் பரப்புரை தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks