CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!

CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
News Image

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவராக இருந்த விஜய், தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்துக்கு வருகை தந்தார். அவரைக் காணும் ஆவலில் காலை முதலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மக்கள் கூட்டம் குவிய தொடங்கியது. மதியம் 12 மணிக்கு வருகை தருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் வழியெங்கும் தெரிவித்த வரவேற்பு காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விஜய் வந்து சேர இரவு 7.30 மணியாகி விட்டது. சில நிமிடங்கள் மட்டுமே பேசிய விஜய் அங்கிருந்து புறப்பட்டார். அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. கரூருக்கு கிட்டதட்ட 9 மாதங்கள் கழித்து முதலமைச்சரான பிறகு விஜய் கடந்த ஜூலை மாதம் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய 41 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு தகுதி அடிப்படையிலான அரசு வேலை வழங்கினார். அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நேரில் அழைத்து காலில் விழுந்து விஜய் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

என்னதான் கரூர் சம்பவத்துக்கு முழுக்க விஜய் தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அவருக்கு ஆதரவாக இருந்தது பெரும் பேசுபொருளாக அமைந்தது. இந்த நிலையில் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி விஜய் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே கரூர் சம்பவம் நினைவு நாளை முன்னிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அம்மாவட்டத்தின் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks