பிரபாகரன் பேரை சொல்லி தமிழகத்தில் ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். அது யார் என்று தெரியும். அவர் யார்? என அமைச்சர் வன்னியரசு சீமானை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடந்து முடிந்த நிலையில் அதன் தீர்மான விளக்க பொது கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் நடைபெற்றது. இதில் அமைச்சர் வன்னியரசு பங்கேற்றார்.

சட்டமன்றம் போலவும், ஆட்சியில் பங்கேற்றோம், 2031-இல் ஆளும் கட்சியாக பரிணமிப்போம் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பேனர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்தது.

விழாவில் பேசிய அமைச்சர் வன்னியரசு, இரவு நேர வணக்கம்.நேரம் கடந்து விட்டது. உரையை சீக்கிரம் முடித்து கொள்கிறேன். தமிழர்களுக்காக போராடி வருபவர் திருமாவளவன். விடுதலை புலிகளின் லெப்டினட் ஜெனரல் திலீபன் உண்ணாவிரதம் இருந்த நாள். 5 கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்.
அவரின் நினைவு நாள் என்பதால் இன்று பொது கூட்டம் போட்டுள்ளோம். விடுதலை புலிகளை போல விடுதலை சிறுத்தைகள் என திருமாவளவன் பெயர் சூட்டினார். விடுதலை புலிகளுக்கும்,விடுதலை சிறுத்தைகளுக்குமான உறவுகள் சாதாரணமானவை அல்ல.

போக்குவரத்து அமைச்சரிடம் கூறி பழவேற்காட்டில் பேருந்து நிலையம் அமைக்கவும், மீன்வளத்துறை அமைச்சரிடம் பேசி நிரந்தர முகத்துவாரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2008-இல் என் மீது வழக்கு பதியப்பட்டு விடுவித்தனர். படகுக்கான உதிரி பாகங்களை கொடுத்தேன் என்பதற்காக வழக்கு போடப்பட்டது.
இன்றும் என் பாஸ்போட் முடக்கப்பட்டுள்ளது. உதவி செய்தேன் என்பதற்காக கைது செய்யப்பட்டேன்.

மாநாட்டில் 125 தீர்மானங்களை நிறைவேற்றினோம். இந்திய வரலாற்றில் 125 தீர்மானங்களை நிறைவேற்றியது விசிக மட்டும் தான். 15 நாட்களுக்கு முன்பு மும்பையில் அமித்ஷா பேசும்போது இந்தி, இந்தியாவின் இணைப்பு மொழி என கூறினார். இந்தியாவின் இணைப்பு மொழி ஆங்கிலம்தான். இந்துராஷ்டரமாக மாற வேண்டும் என்ற அடிப்படையில் பாஜக, சங்க் பரிவார அமைப்புகள் பல்வேறு படுகொலைகளை செய்தனர்.

இந்திக்கு என ஒரு சிறப்பு இல்லை. தமிழ் மொழி இணைப்பு மொழியாக்க வேண்டும் என நாம் கேட்கிறோம்.
நாடு சுதந்திரம் அடைந்த பின் தேசிய கீதம் எது என விவாதம் வந்தது. நேரு உள்ளிட்ட குழு வந்தே மாதரம் பாட முடியாது எனவும் ஜனகன மண பாட முடிவு செய்யப்பட்டது.

ஆர்எஸ்எஸ், சங்க் பரிவார கும்பல் இப்போது வந்தே மாதரம் பாட கட்டாயப்படுத்துகிறது. பாஜக பயங்கரவத்த்தை கட்டவிழ்த்துவிடும் கட்சி. அம்பேத்கருக்கு எதிராக யார் பேசினாலும் தேச துரோகிகள்.
அம்பேத்கரின் சிலையை தொட பாஜவினர் அருகதையற்றவர்கள்.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை போராட்டம் தொடர்பாக என் மீது வழக்கு போடப்பட்டது. திமுக ஆட்சியில் வாபஸ் பெறப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த போது இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித்துக்களை கைது செய்தனர்.

கடந்த காலங்களில் திமுகவுடன் இணைந்து செயல்பட்டோம். இந்த அமைச்சரவையில் பங்கேற்றிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் வரலாறு மீண்டும் திரும்பி கொண்டிருக்கிறது. திருமாவளவன் மீது காவிகள் குற்றம் சுமத்தி கொண்டிருக்கின்றனர். கடல்வள திருத்த மசோதாவை கொண்டு வந்தனர். நாடாளுமன்றத்தில் அதனை நடைமுறைபடுத்த கூடாது என முழங்கியது விசிக.

இந்தியாவின் நலனை பாதுகாக்க விசிக தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டை நடந்தினோம். பிரபாகரன் பேரை சொல்லி தமிழகத்தில் ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். அது யார் என்று தெரியும். அவர் யார்?ஓம் தமிழர்.
ஆர்எஸ்எஸின் கிளை அமைப்பு ஓம் தமிழர். சீமான் தலைமையில் இயங்கும் ஓம் தமிழர் கட்சியும் ஆர்எஸ்எஸின் கிளை அமைப்பு. தமிழ்நாட்டில் உண்மையான தமிழ் தேசியம் விசிக தான்.

சிறுத்தையாக இருப்பதே பெருமை. எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ இருக்கலாம். ஆனால் விசிக என்பதே பெருமை. வருங்காலம் சிறுத்தைகள் காலம் எனவும் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மதுராந்தகத்தில் 30 ஆம் தேதி திருமாவளவன் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். குழு அமைத்திருக்கிறோம், களத்தில் பணிகளை தொடங்கி விட்டோம்; பரப்புரை செய்யவில்லை என்பது தவறான செய்தி எனவும்,

ஞானேஷ் குமாருக்கு எதிராக தேர்தல் திருத்த சட்டம் கொண்டு வரும் போது எதிர்த்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் எனவும், நாடாளுமன்றத்தில் அவர் பதவி விலக வலியுறுத்திய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் இயக்கம், காங்கிரஸ் இந்தியா கூட்டணி இயக்கம் எனவும்,

ஞானேஷ்குமார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார் என விவேக் ஜோசி எஸ் எஸ் சிங்காவாவழக இருக்கட்டும் அம்பலப்படுத்திய பிறகு போராட்டக் களத்திற்கு வந்திருக்கிறோம் எனவும், எங்களுடைய தலைவர் அவர்கள் ஞானேஷ் குமாரை பதவி விலக வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளார் எனவும், அடுத்தடுத்த கட்டத்திற்கு நாங்கள் போராட்ட களத்திற்கு செல்வோம் எனவும், இடைத்தேர்தல் இருப்பதால் போராட்டம் தள்ளிப் போகிறது; கட்டாயம் போராட்டத்தை நடத்துவோம் எனவும்,

மதச்சார்பற்ற நாடு என்றால் அரசு எந்த மதத்தையும் சாரக்கூடாது எனவும், எந்த அரசும் மதச்சார்போடு இருக்கக் கூடாது நபர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் அந்தந்த மதம் குறித்து பேசலாம் எந்த மதத்தையும் தழுவலாம் எந்த மதத்தையும் பரப்பலாம் என்பது அம்பேத்கர் கொடுத்த சட்டம், உரிமை எனவும் அரசு தான் அப்படி செயல்பட கூடாது, தனி நபர்கள் யார் வேண்டுமானாலும் கடந்த காலங்களிலும் பேசியுள்ளனர் எனவும் நாடாளுமன்றத்தில் ராமர் குறித்து மோடி பேசவில்லையா? அமித்ஷா பேசவில்லையா? எனவும் பெரும்பான்மை மதத்தை நிறுவுவதற்கான முயற்சி செய்கிறது எனவும் அம்பேத்கரின் சட்டத்தை தகர்த்தும் விதத்தில் மதச்சார்பற்ற அந்தக் கொள்கை நீர்த்துப் போகின்ற வேலைகளை செய்கின்றனர் எனவும், அவர்களின் நோக்கம் மதச்சார்பை இன்னைக்கு எதிரானது என்பதை சொல்கிறோம் எனவும் பழவேற்காட்டில் அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article