Chennai: தி.நகர் முதல் பாரிஸ் கார்னர் வரை.. சென்னையில் இந்த பகுதிகளுக்கு ஏன் இந்த பேரு வச்சாங்க?

Chennai: தி.நகர் முதல் பாரிஸ் கார்னர் வரை.. சென்னையில் இந்த பகுதிகளுக்கு ஏன் இந்த பேரு வச்சாங்க?
News Image

தமிழ்நாட்டின் தலைநகராக திகழ்வது சென்னை. சென்னையில் உள்ள ஒவ்வொரு பகுதியும் புகழ்பெற்ற பகுதியாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களுக்கு எந்தளவு பாரம்பரியமும், வரலாறும் உள்ளதோ, அதே அளவிற்கு சென்னைக்கும் உள்ளது.

ஏன் பெயர் வந்தது?

சென்னையில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள ஒவ்வொரு பெயருக்கும் வரலாற்று காரணம் உள்ளது. சென்னையில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் அந்த பெயர் யாருடைய நினைவாக சூட்டப்பட்டுள்ளது? என்பதை கீழே காணலாம்.

1. தி.நகர்:

சென்னையின் புகழ்பெற்ற பகுதியாகவும், அடையாளமாகவும் திகழ்வது தி.நகர். சென்னையின் புகழ்பெற்ற தொழிலதிபர், வழக்கறிஞர் மற்றும் அரசியல் தலைவராக திகழ்ந்தவர் திவான் சர் பிடி தியாகராய செட்டியார். அவரது நினைவாகவே தி.நகர் என்று அந்த பகுதிக்கு பெயர் சூட்டப்பட்டது.

2. பனகல் பார்க்:

தி.நகர் அருகே அமைந்துள்ள பனகல் பார்க் சென்னையில் மிகவும் பிரபலமான பகுதியாகும். அந்த பகுதிக்கு பனகல் ராஜாவான ராஜா சர் பனகந்தி ராமராய ஐயங்கர் நினைவாக பனகல் பார்க் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னை மாகாணத்தி்ன் முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர்.

3. பாரிஸ் கார்னர்:

சென்னை என்றாலே அனைவரது நினைவுக்கும் வரும் பகுதியில் ஒன்று பாரிஸ் கார்னர். ஆங்கிலேயர் காலத்தில் தவிர்க்க முடியாத    நகரமாக இருந்தது. இந்த பகுதிக்கு தாமஸ் பெர்ரியின் நினைவாகவே பாரிஸ் கார்னர் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆங்கிலேயே தொழிலதிபரான அவர் தொடங்கியதே புகழ்பெற் பாரீஸ் நிறுவனம். இன்றும் பாரிஸ் கார்னர் பகுதியில் ஒரு மிகப்பெரிய அடையாளமாக நிற்கிறது.

4.அண்ணாநகர்:

தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் நினைவாக அண்ணாநகர் என்று அந்த பகுதிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் ஆடம்பரமான மற்றும் தவிர்க்க முடியாத பகுதியாக அண்ணாநகர் உள்ளது.

5. திரு.வி.க.நகர்:

சென்னையின் புகழ்பெற்ற சாலைகளில் ஒன்று திரு.வி.க. சாலை ஒன்றாகும். தமிழறிஞரான திரு.வி.கல்யாணசுந்தரனார் நினைவாக இந்த சாலைக்கு அந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், வட சென்னையின் முக்கியமான பகுதிக்கும் திரு.வி.க.நகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது பெயரில் பூங்காவும் உள்ளது.

6. கே.கே.நகர்:

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களில் ஒருவரான கருணாநிதியின் நினைவாக கே.கே.நகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அசோக் நகர் அருகில் இந்த பகுதி அமைந்துள்ளது.

7. டிமான்டி காலனி:

டிமான்டி காலனி என்பது திரைப்படமாக வந்ததால் அனைவரும் அறிந்ததே ஆகும். ஜான் டி மான்டி என்ற போர்ச்சுகீசிய வணிகரை குறிக்கும் விதமாக இந்த பகுதிக்கு டிமான்டி காலனி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

8. எல்லீஸ் சாலை:

சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்று எல்லீஸ் சாலை. ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய நிறுவனத்தில் எழுத்தராக பணியைத் தொடங்கி, பின்னர் நீதிபதி- வரை பதவி உயர்வு பெற்ற ஃப்ரான்ஸிஸ் ஒயிட் எல்லீஸ் நினைவாக இந்த சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

9. ரங்கநாதன் சாலை:

சென்னையின் மிகவும் புகழ்பெற்ற சாலைகளில் ஒன்று ரங்கநாதன் சாலை ஆகும். இந்த சாலைக்கு ரங்கசுவாமி ஐயங்கார் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. பத்திரிகையாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதியாக திகழ்ந்த இவர் தஞ்சையைச் சேர்ந்தவர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks