சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(17.09.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 17-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டூர்புரம்

புதுச்சேரி சாலை

பொன்னியம்மன் கோயில் தெரு

மண்டபம் சாலை

துலுகந்தம்மன் கோயில் தெரு

பெருமாள் கோயில் தெரு

எல்லையம்மன் கோயில் தெரு

திருவள்ளுவர் தெரு

கருணாநிதி தெரு

மணப்பன் தெரு

யாதவள் தெரு

லேக் வியூ தெரு

குருவப்பன் தெரு

கிண்டி

வண்டிக்காரன் சாலை

நேரு நகர் 1 முதல் 4-வது தெருக்கள்

அன்பழகன் தெரு

பாரதிதாசன் தெரு

ஜீவானந்தம் தெரு

கோவிந்தசாமி தெரு

கேவிகே சாமி தெரு

கன்னியம்மன் கோயில் தெரு

சத்தியமூர்த்தி தெரு

ராஜ் பவன் காலனி

டிஎன்எச்பி காலனி

கோயம்பேடு மார்க்கெட்

மாதா கோயில் தெரு

அழகம்மாள் நகர் 1 முதல் 8-வது தெரு

திருவள்ளுவர் தெரு

நேதாஜி அவென்யூ

கன்னியம்மன் நகர்

நாராயணியம்மன் கோயில் தெரு

பாரதியார் தெரு

பெருமாள் கோயில் தெரு

திருமுல்லைவாயல்

சிட்கோ மகளிர் தொழிற்சாலைகள்

மோரை வீராபுரம்

கன்னியம்மன் நகர்

டிஎஸ்பி முகாம்

வாணியசத்திரம்

காஞ்சி காமகோடி நகர்

ராமாபுரம்

கல்லிக்குப்பம்

கன்னிகாபுரம்

அலமாதி

புதுக்குப்பம்

சிங்கிள் குப்பம்

லட்சுமிநாதபுரம்

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article