யார்ட்ட பேசுற ? " தொடர் சந்தேகத்தால் வெடித்த மோதல் " சோகத்தில் முடிந்த குடும்பம்

யார்ட்ட பேசுற ? " தொடர் சந்தேகத்தால் வெடித்த மோதல் " சோகத்தில் முடிந்த குடும்பம்
News Image

"நீண்ட நேரமாக செல்போனில் பேச்சு"

சென்னை மாங்காடு அடுத்த பட்டூரை சேர்ந்தவர் முஜைதீன் ( வயது 30). இவர் இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சோபியா ( வயது 26 ) இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு 7 வயதில் மகன் உள்ளார்.

கடந்த சில தினங்களாக சோபியா அடிக்கடி செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டு இருந்துள்ளார். இது பற்றி கணவர் கேட்ட போது மனைவி முறையான பதிலை தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. இது கணவருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

"கணவன் - மனைவி இடையே வாக்கு வாதம்"

இதன் பிறகும் சோபியா யாருடனோ தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக தம்பதி இடையே வாக்குவாதம், பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.இந்த நிலையில் சோபியா ஆண் ஒருவருடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசியதால் கோபம் அடைந்த முஜைதீன் அவரை கண்டித்ததுடன் இனிமேல் செல்போனில் பேசக் கூடாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்

இருப்பினும் தொடர்ந்து செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் கோபத்துடன் சென்ற முஜைதீன் , வீட்டில் வைத்திருந்த இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்த சோபியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மனைவி இறந்து விட்டார் என உறுதி செய்த பிறகு முஜைதீன் அங்கிருந்து சென்றுள்ளார். இதனிடையே அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவல்படி, மாங்காடு போலீசார் வந்து சோபியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மாங்காடு பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த முஜைதீனை கைது செய்தனர்.

பின்னர் அவரை மாங்காடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks