மதுரை வரும் முதல்வர் விஜய்? வேகம் எடுக்கும் ஏற்பாடு பணிகள் - முழு விவரம் !

மதுரை வரும் முதல்வர் விஜய்? வேகம் எடுக்கும் ஏற்பாடு பணிகள் - முழு விவரம் !
News Image

மதுரையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் - முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகையை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்

தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கல்' திட்டம்

மதுரையில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில், 'தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கல்' திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக அவர் மதுரைக்கு வருகை தர உள்ளதை அடுத்து, மாநகர் முழுவதும் முன்னேற்பாட்டு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் இந்த விழா நடைபெறுகிறது. இதனையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

கட்டடங்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகின்றன

மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகின்றன. மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்கப்பட்டு, புதிய தார்ச் சாலைகள் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் வருகையையொட்டி பெருந்திரளான பொதுமக்களும், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சாலையின் இருபுறமும் தடுப்புக்கட்டைகள் (Barricades)

இதன் ஒரு பகுதியாக, கோரிப்பாளையம் முதல் அண்ணா பேருந்து நிலையம் வரையிலான 1 கிலோமீட்டர் தொலைவிற்குச் சாலையின் இருபுறமும் தடுப்புக்கட்டைகள் (Barricades) அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், சுகாதார நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோரிப்பாளையத்தில் இருந்து அண்ணா பேருந்து நிலையம் வரை உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தகர சீட்டுகளைக் கொண்டு மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் மாநகராட்சி ஆணையர் கெளரவ்குமார் ஆகியோர் கோரிப்பாளையம் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks