இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.

குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். மேலும் திருவிழாக் காலங்கள் மற்றும் முக்கியமான தினங்களில் பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் சேவைகளின் பயண நேரங்களை அவ்வப்போது மாற்றி வருகிறது ரயில்வே நிர்வாகம், இந்த் நிலையில், ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில், பயணிகளுக்கு பயன்படும் வகையில் சிறப்பு ரயில் சேவைகள் (Special Train) அறிவிக்கப்பட்டுள்ளன.

மும்பை சிஎஸ்எம்டி–சென்னை கடற்கரை சிறப்பு ரயில் (01015), அக்டோபர் 14, 21, 28 மற்றும் நவம்பர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. புதன்கிழமைகளில் மும்பை சிஎஸ்எம்டியில் நள்ளிரவு 12.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். மறுமார்க்கத்தில் சென்னை கடற்கரை–மும்பை சிஎஸ்எம்டி சிறப்பு ரயில் (01016), அக்டோபர் 15, 22, 29 மற்றும் நவம்பர் 5, 12, 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. வியாழக்கிழமைகளில் சென்னை கடற்கரையில் அதிகாலை 4 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 4.05 மணிக்கு மும்பை சிஎஸ்எம்டியை சென்றடையும். காட்பாடி, ஜோலார்பேட்டைக்கு சிறப்பு ரயில்வடதமிழக பயணிகளுக்கு பயன்படும் வகையில் விசாகப்பட்டினம்–எஸ்எம்விடி பெங்களூரு இடையேயான சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது. விசாகப்பட்டினம்–எஸ்எம்விடி பெங்களூரு சிறப்பு ரயில் (08583), அக்டோபர் 6, 13, 20, 27 மற்றும் நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும்.விசாகப்பட்டினத்தில் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு காட்பாடி வந்தடையும். அங்கிருந்து காலை 8.35 மணிக்குப் புறப்பட்டு, 9.48 மணிக்கு ஜோலார்பேட்டை வந்தடையும். 9.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 12.45 மணிக்கு எஸ்எம்விடி பெங்களூருவை சென்றடையும். மறுமார்க்கத்தில் எஸ்எம்விடி பெங்களூரு–விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் (08584), அக்டோபர் 7, 14, 21, 28 மற்றும் நவம்பர் 4, 11, 18, 25 ஆகிய புதன்கிழமைகளில் இயக்கப்படும்.

பெங்களூருவில் பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மாலை 6.43 மணிக்கு ஜோலார்பேட்டை வந்தடைந்து 6.45 மணிக்குப் புறப்படும். இரவு 7.58 மணிக்கு காட்பாடி வந்தடைந்து 8 மணிக்குப் புறப்படும். மறுநாள் பிற்பகல் 1.30 மணிக்கு விசாகப்பட்டினத்தை சென்றடையும். தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள பண்டிகை கால அறிவிப்புகளில் மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ்–திருவனந்தபுரம் வடக்கு இடையேயான சிறப்பு ரயிலும் இடம்பெற்றுள்ளது. இந்த ரயில் தமிழ்நாடு வழியாக இயக்கப்படவில்லை.

Source: Read Full Article