மழை ஓய்ந்தது! இடுக்கி சுற்றுலா மையங்கள் மீண்டும் களைகட்டியது: தேக்கடி, வாகமனில் குவியும் பயணிகள்.

மழை ஓய்ந்தது! இடுக்கி சுற்றுலா மையங்கள் மீண்டும் களைகட்டியது: தேக்கடி, வாகமனில் குவியும் பயணிகள்.
News Image

இடுக்கி மாவட்டத்தில் மழை குறைந்து தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா மையங்கள் மீண்டும் களைகட்டத் தொடங்கி உள்ளன.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. தேக்கடி, வாகமன், ராமக்கல்மெட்டு, மூணாறு, மாங்குளம், இரவிகுளம் வரையாடு பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளில் ஆண்டின் பல மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை இருந்து கொண்டே இருக்கும். இங்குள்ள நிலப்பரப்பு பசுமை பள்ளத்தாக்குகளாகவும், மூடுபனி, சில்லென்ற பருவநிலையுடன் அமைந்துள்ளதால் வெளிநாட்டு பயணிகளும் இங்கு அதிகளவில் வருவர்.

இவர்களுக்காக யானை, படகுசவாரி, சாகச பூங்கா மற்றும் ஏராளமான காட்சி மையங்களும் (வியூபாய்ண்ட்) உள்ளன. இருப்பினும் பருவமழை மற்றும் கனமழையின் போது நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதால் அந்த நேரங்களில் சுற்றுலா செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் மூணாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பல பகுதிகளிலும் மழையினால் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இடுக்கி மாவட்டத்துக்கு வருவதற்கும் இரவு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், மழை குறைந்து தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து சுற்றுலா மையங்களும் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

இதனால் தேக்கடியில் படகு, குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இதே போல் வாகமனில் உள்ள ஊசியிலை காடுகள் (பைன் பாரஸ்ட்), புல்வெளி குன்றுகள், நீர்வீழ்ச்சி போன்ற பல்வேறு இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா வர்த்தகம் மீண்டும் களைகட்டத் தொடங்கியது. இது குறித்து இங்குள்ள சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், கேரளத்தைப் பொறுத்தளவில் சுற்றுலா மூலமே அரசுக்கும், தனிநபர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. ஹோட்டல், ரிசார்ட்ஸ், விடுதி, ஜீப் இயக்கம், வழிகாட்டிகள், மசாலா விற்பனை மையங்கள் போன்ற பல வர்த்தகங்கள் சுற்றுலாவை நம்பியே உள்ளது. கடந்த வாரம் காலநிலை மோசமாக இருந்ததால் வர்த்தகம் பாதித்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks