தஞ்சை சாலைகளில் தாறுமாறாக ஓடும் குதிரைகள்! வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம்

தஞ்சை சாலைகளில் தாறுமாறாக ஓடும் குதிரைகள்! வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம்
News Image

தஞ்சாவூர்: தஞ்சை மாநகரின் முக்கிய சாலைகளில் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கும், விபத்து அபாயத்துக்கும் ஆளாகி வருகின்றனர். குறிப்பாக குதிரைகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் சம்பவங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடு, நாய், குதிரை உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தி பராமரிக்காமல் சாலைகளில் அவிழ்த்து விடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளிலேயே கால்நடைகள் சர்வசாதாரணமாக சுற்றித்திரியும் நிலை காணப்படுகிறது.

முக்கிய சாலைகளில் தொடரும் தொல்லை

தஞ்சை-நாகை சாலை, மருத்துவக்கல்லூரி சாலை, அரண்மனை பகுதி, காமராஜர் மார்க்கெட், புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை, தொல்காப்பியர் சதுக்கம், ஜி.கே. மூப்பனார் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. குறிப்பாக தொல்காப்பியர் சதுக்கம், எம்.கே. மூப்பனார் சாலை, சிவகங்கை பூங்கா, விளார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் குதிரைகள் அதிகளவில் சாலைகளில் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

சில நேரங்களில் குதிரைகள் ஒன்றையொன்று விரட்டியபடி சாலையில் ஓடுவதால், அருகில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் நடமாடவும் அச்சம்

குதிரைகள் மட்டுமின்றி மாநகரின் பல பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சாலைகளில் நாய்கள் படுத்துக்கிடப்பதும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதும் தொடர்கிறது.

குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் மற்றும் குதிரைகள் சுற்றித்திரிவதால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் சாலைகளில் செல்லும்போது அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குதிரைகள் திடீரென ஓடும்போது வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைவதாகவும், சில நேரங்களில் குதிரைகள் பொதுமக்களை விரட்டிச் சென்று கீழே தள்ளிவிடும் சம்பவங்களும் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சிறு விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைக்க கோரிக்கை

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தஞ்சை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. அவற்றின் உரிமையாளர்கள் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்காமல் சாலைகளில் அவிழ்த்து விடுவதால், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் சில நேரங்களில் வாகனங்களில் அடிபடும் அபாயமும் உள்ளது. அதேபோல், இருசக்கர வாகனங்களில் செல்வோரை கால்நடைகள் திடீரென குறுக்கிட்டு கீழே தள்ளிவிடும் நிலையும் ஏற்படுகிறது.

எனவே, கால்நடைகளை சாலைகளில் அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து பாதுகாப்பான பட்டியில் அடைப்பதுடன், அவற்றின் உரிமையாளர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாநகரின் முக்கிய சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் இந்த போக்குவரத்து இடையூறுக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks