"நேரில் செல்லாமல் பதிவு செய்வது கட்டாயம்"

தமிழகத்தில் பத்திரப் பதிவு பணிகளை , ஆன்லைன் முறைக்கு மாற்ற பதிவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக , 'ஸ்டார் 3.0' மென் பொருள் அறிமுகப் படுத்தப்பட்டது. இதில் , புதிய திட்டங்களில் வீடு, மனை வாங்குவதற்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகம் வராமல் பதிவு செய்யும் வசதி ஆகஸ்ட் 17 - ல் அறிமுகமானது.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து தற்போது, வீட்டுக் கடன் போன்ற விஷயங்களுக்காக மக்கள் , வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எழுதி கொடுக்கும் எம்.ஓ.டி., எனப்படும் ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரம் , கடன் முடியும் போது மேற்கொள்ளப்படும் ரசீது ஆவணம் ஆகியவற்றையும் , நேரில் வராமல் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

"24 - மணி நேரத்தில் ஒப்புதல்"

இந்த புதிய முடிவில் 'ஆன்லைன்' முறையில், பொது மக்கள் தாக்கல் செய்யும் பத்திரங்களுக்கு, 24 மணி நேரத்துக்குள் சார் - பதிவாளர்கள் , ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் , தினமும் சார் - பதிவாளர்கள் அலுவலகத்துக்கு வந்ததும் , முதல் பணியாக , 'ஆன்லைன்' முறையில் தாக்கலான பத்திரங்களை ஆய்வு செய்வதில் இறங்குகின்றனர்.

இந்த பணிகள் முடிந்த பின், வழக்கமான பிற பத்திரங்களை பதிவு செய்ய வருகின்றனர். இதன் காரணமாக , காலையில் பத்திரப் பதிவுக்கு டோக்கன் பெற்று வருவோர், பகல் 12:00 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் பத்திரம் பதிவாக வேண்டும் என்பதற்காக பெறப்படும், 'டோக்கன்' பயனில்லாமல் போகிறது.

'ஆன்லைன்' முறையில் பதிவாகும் பத்திரங்களுக்கு , முன்னுரிமை அளிப்பதில் தவறில்லை. அதே நேரம் நேரடியாக பதிவு செய்ய வருவோரை காத்திருக்க வைக்காமல் , அவர்களுக்கும் உடனடியாக பத்திரப் பதிவு செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து , சார் - பதிவாளர் ஒருவர் கூறியதாவது ;

பதிவுத் துறை இணைய தளத்தில் , 'ஆன்லைன்' பத்திரங்களை முடித்த பின் தான் , நேரடியாக வரும் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் , மென்பொருள் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நினைத்தாலும், 'ஆன்லைன்' பத்திரத்தை தவிர்த்து , பிற பத்திரங்களை முதலில் பதிவு செய்ய முடியது என இவ்வாறு அவர் கூறினார்.

Source: Read Full Article