இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். குறிப்பாக பண்டிகை காலங்களில் ரயில் பயணிகளுக்கு ஏற்றார்போல் அவ்வப்போது ரயில் நேரங்கள் மாற்றம் உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது ரயில்வே நிர்வாகம்.

இந்த நிலயில், திருப்பதி மற்றும் சென்னை இடையே இன்று முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி–சென்னை இடையே பயணிக்கும் மக்களின் வசதிக்காக இன்று செப்டம்பர் 20-ஆம் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த கூடுதல் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் இருந்து அதிகாலை புறப்பட்டு, சென்னை கடற்கரை நிலையத்தை காலையிலேயே சென்றடையும் வகையில் ரயில் இயக்கப்படுகிறது. திருப்பதியில் இருந்து இன்று செப்டம்பர் 20-ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு புறப்படும் ரயில், காலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கத்தில், சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 8.40 மணிக்கு ரேணிகுண்டாவை சென்றடையும். இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் இந்த சிறப்பு மெமு ரயில்களுக்கு முன்பதிவு தேவையில்லை. திருப்பதி–சென்னை மற்றும் சென்னை–ரேணிகுண்டா வழித்தடத்தில் பயணிக்க விரும்புவோர் இந்த கூடுதல் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். செப்.20-ஆம் தேதி மட்டும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் வழித்தடத்தில் ரேணிகுண்டா, புத்தூர், ஏகாம்பரகுப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் பெரம்பூர் ஆகிய நிலையங்களில் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த நிலையங்களைச் சேர்ந்த பயணிகளும் சிறப்பு ரயில் சேவையைப் பயன்படுத்த முடியும்.பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த சிறப்பு சேவை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. குறிப்பாக அதிகாலை நேரத்தில் திருப்பதியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து ரேணிகுண்டாவுக்கும் பயணிக்க விரும்புவோருக்கு இந்த ஒரு நாள் சிறப்பு மெமு ரயில் கூடுதல் பயண வாய்ப்பை வழங்குகிறது.

Source: Read Full Article