அதிமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்ட ஆதவ் .. இபிஎஸ் சொன்ன ஒரே வார்த்தை.. என்ன தெரியுமா?

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்ட ஆதவ் .. இபிஎஸ் சொன்ன ஒரே வார்த்தை.. என்ன தெரியுமா?
News Image

உன்னைப்போல பல கட்சி மாறியவன் நான் இல்லை. தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவன் நான் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 118ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் தாதகாப்பட்டி கேட்  என்ற இடத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, “மதுராந்தகத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் பேசும்போது, சேலம் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் மட்டும் நின்றிருந்தால் எடப்பாடி பழனிசாமி தோற்றிருப்பார் என மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியிருக்கிறார். தம்பி, தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தவன் நான். சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 தொகுதிகளில் 7 தொகுதிகளில் அதிமுக தான் ஜெயித்தது. சரியாக தெரியாமல் பேச வேண்டாம். உங்களைப் போல பல கட்சிகளுக்கும் போய்விட்டு வந்தவன் நான் அல்ல. இந்த இயக்கத்தின் கிளைச் செயலாளராக இருந்து பொதுச்செயலாளராக உழைப்பால் நான் உயர்ந்திருக்கிறேன்.

ஆதவ் அர்ஜூனா முதலில் திமுகவில் இருந்து சபரீசனுக்கு பெட்டி தூக்கிக் கொண்டிருந்தீர்கள். அதன்பின்னர் விசிகவுக்கு சென்றீர்கள். அதனையடுத்து என்னை சந்தித்து பேசினார். அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என கேட்டார். நான் தம்பி இந்த கட்சியில் பதவியெல்லாம் விற்பது கிடையாது என சொல்லிவிட்டேன். அதன்பின்னர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்று அந்த கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார். நீயெல்லாம் அண்ணா திமுகவைப் பற்றி பேசலாமா?.. அதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா?.. வாய், நாக்கு இருப்பதால் எதுனாலும் பேசலாமா?.. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். அவர்களைப் பார்ப்பதற்கு கூட நீங்கள் செல்லவில்லை. உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் கரூருக்கு ஓடோடி போய் ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். எல்லாரும் ஓடிவிட்டார்கள். 15 நாட்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அலுவகத்தை மூடி விட்டார்கள். ஆதவ் அர்ஜூனா வெளிமாநிலத்திற்கு சென்று விட்டார். அப்படி வீரமிக்கவர்கள் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக ஆட்சியில் எதை செய்தாலும் விளம்பரம் செய்கிறார்கள். நாம் அப்படி செய்யாததால் தான் பின்னடைவை சந்தித்து விட்டோம். இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெகவின் 4 மாதங்களில் உணவுப்பொருட்களின் விலை 40 சதவிகிதம் உயர்ந்து விட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. தங்குவதற்கு இடமில்லாமல் ஏழை மக்கள் இருக்கிறார்கள். ஆனால் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தனது அறை போதவில்லை என கூறுகிறார். இவர் காஸ்ட்லி முதலமைச்சர் என எடப்பாடி பழனிசாமி விளாசியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks