கை,காலில் விழுந்தாவது இடைத்தேர்தலில் ஜெயிக்கணும்.. தொண்டர்களுக்கு துரைமுருகன் உத்தரவு!

கை,காலில் விழுந்தாவது இடைத்தேர்தலில் ஜெயிக்கணும்.. தொண்டர்களுக்கு துரைமுருகன் உத்தரவு!
News Image

பழைய திமுககாரனாக நீங்கள் மாற வேண்டும். இரு தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று அதனை மு.க.ஸ்டாலின் காலில் சமர்பிக்க வேண்டும் என துரைமுருகன் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 15ம் தேதி நடைபெறவிருந்த  திமுக முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், “இந்த விழா நடக்கும்போது மு.க.ஸ்டாலின் சிந்தனையில் அந்த விழா இல்லை என என்பது எனக்கு தெரியும். இரண்டு இடங்களில் நம்முடைய வீரர்கள் போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். இரண்டு களங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. எதிரியோ மாயாவியாகவோ, ஆளாக வருவானா என்பதை பார்க்க வேண்டும். எப்படியோ ஒருமுறை திமுக ஏமாந்து விட்டது. இனி திமுககாரனை ஏமாற்ற எந்த கொம்பனும் ஏமாற்ற முடியாது. மன்னாதி மன்னனை எல்லாம் தோற்கடித்த கட்சி இது. ஒருகாலத்தில் ராமநாதபுரம் ராஜாவை அவரது அரண்மனை வளாகத்தில் சைக்கிள் கடை வைத்திருந்தவரைக் கொண்டு அண்ணா தோற்கடித்தார். இதேபோல் புதுக்கோட்டை மன்னர் உள்ளிட்டோரை திமுக வென்றுள்ளது.

அந்த வீரம் இன்னும் தமிழ்நாட்டில் மாண்டு போய்விடவில்லை. நான் உங்களையெல்லாம் பணிவண்புடன் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். இந்த களம் ரொம்ப முக்கியமானது. நம்முடைய இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீரம் மிக்க எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்திருக்கிறார். அவருடைய களத்தில் அவர் வென்றுக் கொண்டிருக்கிறார். ராநம்முடைய களத்தில் நாம் வென்றாக வேண்டும். பழைய திமுககாரனாக நீங்கள் மாற வேண்டும். மேடைகளில் திமுக தொண்டன் பேசும்போது, யாவது தாக்குதல் நடத்தினார் வரும்போது வாய்க்கரிசி போட்டு விட்டு வந்தவன் என கூறுவான். அப்படிப்பட்ட பரம்பரையா கோழையாக இருக்கும்.

திமுககாரன் என்றால் சாதாரணமானவன் அல்ல. இரும்பை நரம்பாக்கி கொண்டவன். எஃகை தசையாக்கி கொண்டவன். அந்த வீரனை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை இந்த இடைத்தேர்தலில் காட்டியாக வேண்டும். எனக்கு என்ன செய்வீர்கள் என்று தெரியாது. வீடு, மனைவி, குழந்தைகளை மறந்து விடுங்கள். யார் கையில், காலில் விழுவீர்களோ தெரியாது. வெற்றியைக் கொண்டு வந்து மு.க.ஸ்டாலின் காலில் சமர்ப்பியுங்கள் என தெரிவித்துள்ளார். அவர் நா தழுதழுக்க பேசியது அங்கிருந்த தொண்டர்களை கண்கலங்க வைத்தது.

துரைமுருகன் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “வெற்றி ஒன்று தான் இலக்கு. திமுகவின் தேர்தல் யுக்தியை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் துரைமுருகன் அப்படி பேசியிருப்பார். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும். ஜனநாயகம் செத்ததால் தான் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது என தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks