தமிழ்நாட்டில் சட்டமன்றக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கைத்தறி, கைத்தறி மற்றும் கதர்த்துறை மீதான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அறிவிப்புகள் என்னென்ன?

இந்த கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறைக்கான புதிய அறிவிப்புகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. தஞ்சையில் ரூபாய் 10 கோடியில் கைவினைச் சுற்றுலா கிராமம் அமைக்கப்படும்.

2. 20 இளைய தலைமுறை கைவினைஞர்களுக்கு ரூபாய் 50 லட்சத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

3. 10 முக்கிய நகரங்களில் ரூபாய் 4.18 கோடியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சிகள்

4. 800 கைவினைஞர்களுக்கு ரூபாய் 8240 லட்சத்தில் தொழில் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.

5. 960 கைவினைஞர்களுக்கு ரூபாய் 2.35 கோடியில் வடிவமைப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை புதிய அறிவிப்புகள் pic.twitter.com/2GuoKbWPvn

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 1, 2026

6. திருவண்ணாமலை, உதகமண்டலம் மற்றும் பெங்களூரில் ரூபாய் 1 கோடியில் புதிய விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும்.

7. தமிழகத்தில் ரூபாய் 2.25 கோடியில் தேசிய மற்றும் 5 மாநில கைத்தறி கண்காட்சிகள் நடத்தப்படும்.

8. திருபுவனத்தில் ரூபாய் 80 லட்சத்தில் புதிய கைத்தறி வடிவமைப்பு நிலையம் அமைக்கப்படும்.

9. நாகர்கோயிலில் ரூபாய் 1 கோடியில் நவீன கைத்தறி ரகங்கள் மற்றும் புதிய ஆடை வடிவமைப்புகள் அறிமுகம் செய்யப்படும்.

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை புதிய அறிவிப்புகள் pic.twitter.com/haTP4H2Fw5

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 1, 2026

10. கோ ஆப்டெக்ஸ் பணியாளர்களுக்கு ரூபாய் 1 கோடியில் தொழில்முறை, விற்பனை மற்றும் நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

11. வெளிநாடுகள் உள்ளிட்ட இந்தியாவில் கோ - ஆஃப்டெக்ஸ் தயாரிப்புகள் விரிவாக சந்தைப்படுத்தப்படும்.

12. நெசவாளர்களுக்கு அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.

13. நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு 8 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை புதிய அறிவிப்புகள் pic.twitter.com/CrejZO39ks

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 1, 2026

14. கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் இளம் தொழில் முனைவோருக்கு ரூபாய் 2.50 கோடி மானியம் வழங்கப்படும்.

15. பாரம்பரிய சிறப்புமிக்க கைத்தறி கூட்டுறவு சங்கக் கட்டிடங்கள் புனரமைக்கப்படும்.

16. காஞ்சிபுரத்தில் ரூபாய் 2 கோடியில் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம் அமைக்கப்படும்.

17. ஆயிரம் தனிநபர் தறிக்கூடங்களில் சூரிய ஒளி மின்தகடுகள் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

18. ரூபாய் 1 கோடியில் சுற்றுச்சூழலுக்கு உகநத இயற்கை சாயச்சாலை நிறுவப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

Source: Read Full Article