அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்

அக்டோபர் முதல் புதிய நடைமுறை.!  ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
News Image

சமூக பாதுகாப்பு திட்டம் உதவித்தொகை

முதியோர் உதவித்தொகை, கைம்பெண்  மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை என மாதம் ரூ.1,200 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நிதி உதவி தடையின்றி கிடைக்க உடனடியாக பயனாளிகள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள உத்தரவில்,

வங்கி கணக்கோடு ஆதார் எண் இணைப்பு

சென்னை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்டங்களின் கீழ்  உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் அனைவருக்கும், இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, செப்டம்பர் 2026 மாதம் முதல் ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இம்மாதம் முதல் பயனாளிகளுக்கான நிதியுதவித்தொகை, அவர்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். அனைத்துப் பயனாளிகளுக்கும் நிதியுதவி முறையான அரசு நடைமுறைகளின் வழியே, எவ்வித தடையுமின்றி, சரியான காலத்தில் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உதவித்தொகை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம்

வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படாத பயனாளிகள், தமது நிதியுதவி தடையின்றி பெற இயலும் வகையில், உடனடியாகத் தங்களது வங்கிக்கிளையை அணுகி ஆதார் இணைப்பை  மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் அல்லது உதவி தேவைப்பட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சிறப்புத் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் அல்லது ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களின் உதவி மையங்களை பயனாளிகள் அணுகி,

தேவையான வழிகாட்டுதலையும் உதவியையும் பெறலாம். ஒவ்வொரு பயனாளிக்கும் நிதியுதவி எவ்வித இடையூறுமின்றி, முறையாகவும் சீராகவும் சென்றடைவதை உறுதி செய்வதில் மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் முழு அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks