3 மாதங்களில் மின்வெட்டு முழுமையாக சரி செய்யப்படும் – தேவையான நேரத்தில் பாஜகவை எதிர்ப்போம் - அமைச்சர் பேட்டி !

3 மாதங்களில் மின்வெட்டு முழுமையாக சரி செய்யப்படும் – தேவையான நேரத்தில் பாஜகவை எதிர்ப்போம் - அமைச்சர் பேட்டி !
News Image

ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறையினர் பலருக்கு தொடர்பு – FIR பதிவு செய்ததே பேரம் பேசுவதற்காக தான்: அமைச்சர் நிர்மல்குமார்.

முதல்வர் மதுரை வருகை அமைச்சர் ஆய்வு

மதுரையில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து காந்தி அருங்காட்சியகத்தில் இன்று அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார்...," ஜெம் வீரமணி வழக்கில் திமுக அரசு இந்த விவகாரத்தை கையாண்ட விதம் தவறானது. திமுக இந்த விவகாரத்தில் அதிகமாக எதிர்வினையாற்றுவது, வழக்கில் ஏதோ தவறு இருப்பதை காட்டுகிறது. முன்னாள் அமைச்சர் ரகுபதி, தொடர்புடைய வீடியோ சரியாக இல்லை எனக் கூறி கடந்து சென்றுள்ளார். வீரமணியை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரமணியை மிரட்டி பலர் பணம் பறித்துள்ளனர் என்றும், இந்த விவகாரத்தில் காவல்துறையைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு உள்ளது என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.

வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்

வீரமணி வழக்கை தவெக அரசு மறைக்க முற்பட்டதாக தான் கூறிய கருத்தை தவறாக புரிந்து கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும், இதுகுறித்து அவர் இன்று விளக்கம் அளிப்பார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். திமுக ஆட்சியில் தகுதியற்றவர் என நிதித்துறையில் இருந்து நீக்கப்பட்டவர் பி.டி.ஆர். என்றும், தற்போது கட்சியில் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை என்றும் அமைச்சர் விமர்சித்தார். தொகுதிக்குள் கூட அவர் செல்லாததால் தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் சுயநலம் காரணமாக அதிமுகவில் இருந்த விசுவாசிகள் அனைவரும் வெளியேறிவிட்டதாகவும், இதே நிலைமை இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவுக்கும் ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதிமுகவும் திமுகவும் குடும்ப சொத்தாக மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.

தேவையான நேரத்தில் பாஜகவை எதிர்ப்போம்

தேவையான நேரத்தில் பாஜகவை எதிர்ப்போம். ஏற்கனவே வக்பு விவகாரம் மற்றும் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான விவகாரங்களில் பாஜகவை எதிர்த்துள்ளோம். பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறியதில் தாங்கள் இதுவரை உறுதியாக இருப்பதாக அமைச்சர் கூறினார். திமுகவை ஒழிக்க வேண்டும் என ஜெயலலிதா நினைத்தார்; அதை விஜய் செய்து காட்டுவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வீரமணி வழக்கில் கடந்த ஆட்சியில் எதற்காக FIR பதிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய அமைச்சர், FIR பதிவு செய்ததே பேரம் பேசுவதற்காகத்தான் என குற்றம்சாட்டினார். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசப்பட்டதாகவும், வழக்குப்பதிவு செய்தவர்கள் ஏன் வீரமணியை கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். மின்வெட்டு தொடர்பான பிரச்னைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 3 மாதங்களில் மின்வெட்டு முழுமையாக சரி செய்யப்படும். மின்துறையில் எங்கெங்கு தவறுகள் உள்ளனவோ அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks