யுபிஐ பரிவர்த்தனையால் மீண்டும் பண மதிப்பிழப்பு வரும் நிலை உருவாகும் என்றும் மீண்டும் மக்கள் பண பரிமாற்றத்திற்கு செல்வார்கள் எனவும் காங்கிரஸ் எம்பி சசிகாந்த செந்தில் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், யுபிஐ பரிவர்த்தனை குறித்து வரும் செய்தி, மோசமான செய்தி எனவும், மக்களை யுபிஐ பரிவர்த்ததனை ஊக்குவித்தது இந்த அரசு தான், ஆனால், இப்போது வரி போடுவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது எனவும், அடுத்த ஒரு மாதத்தில் வரி அனைத்துக்கும் வரி போடுவார்கள், பெட்டிக்கடை முதல் அனைத்து கடைகளிலும் யுபிஐ இருக்கு என மார்தட்டி கொள்ளும் அரசு, ஒருவேளை இதற்காக தான் யுபிஐ-ஐ செய்ய சொன்னார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இது ஆரம்பம், வரி போடும் முறையை தலைகீழாக போடுகின்றனர் எனவும், சாதாரண மக்களிடம் பணம் பிடுங்குகின்றனர், பணம் படைத்தவர்களுக்கு வரி விலக்கு கொடுப்பது எந்தவித்த்தில் நியாயம்? எனவும், இது பொருளாதாரத்திற்கு நல்லது அல்ல எனவும், ஏழைகளை ஒன்னுமில்லாமல் செய்வது அவர்களின் எண்ணம் எனவும், மீண்டும் மக்கள் பண பரிமாற்றத்திற்கு செல்வார்கள் எனவும், மீண்டும் பண மதிப்பிழப்பு வரும் நிலை உருவாகும் எனவும் எம்பி சசிகாந்த் செந்தில் எச்சரித்துள்ளார்.

Source: Read Full Article