Traffic Fines : உங்கள் பைக், காருக்கு எவ்வளவு Fine இருக்கு? ஈசியா தெரிஞ்சுக்கலாம்... Police வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Traffic Fines : உங்கள் பைக், காருக்கு எவ்வளவு Fine இருக்கு? ஈசியா தெரிஞ்சுக்கலாம்... Police வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
News Image

"இ-சலான்" (E-Challan) நிலுவை அபராதம்

தினந்தோறும் சாலைகளில் பல கோடி வாகனங்கள் பயணித்து வருகிறது. இதில் சில வாகனங்கள் உரிய வாகன விதிகளை பின்பற்றாமல் செல்லவதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே தங்களது வாகனங்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்பது கூட தெரியாமல் பலரும் வாகனங்களை ஓட்டி வருகிறார்கள்.  இந்த நிலையில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு இருக்கும் அபராதம் தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளும் சிறப்பு வசதியை சென்னை போலீசார் அறிமுகம் செய்துள்ளனர்.

சிறப்பு அழைப்பு மையங்கள்

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு நிலுவையில் உள்ள இ-சலான் (E-Challan) அபராதங்கள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் சிறப்பு அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை, இந்த அழைப்பு மையங்கள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமக்கள் சேவையைப் பெறலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழைப்பு மையங்களின் சேவைகள்:

நிலுவையில் உள்ள இ-சலான் விவரங்கள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

நிலுவை சலான்கள் குறித்த SMS அனுப்பப்படும்.

தொலைபேசி அல்லது நேரில் வரும் பொதுமக்களுக்கு சலான் மற்றும் அபராதத் தொகை விவரங்கள் வழங்கப்படும்.

அபராதத் தொகை செலுத்துவதற்கான பிரத்யேக வசதிகளும் ஏற்படுத்தப்பப்ட்டுள்ளன.

🚨 "இ-சலான்" (E-Challan) நிலுவை அபராதம் – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

🚦 சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், வாகன ஓட்டிகளின் நிலுவையில் உள்ள இ-சலான் அபராதங்கள் குறித்த தகவல்களை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் 📞 அழைப்பு மையங்கள்… pic.twitter.com/YTxUG56FIu
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) September 17, 2026

நிலுவையில் உள்ள இ-சலான் விவரங்களை echallan.parivahan.nic.in அல்லது NextGen e-Challan மூலம் சரிபார்க்கலாம்.
அபராதத்தை e-Challan Portal / NextGen e-Challan / Paytm / தபால் நிலையங்கள் /தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம்.
மது அருந்தி வாகனம் ஒட்டிய வழக்குகளுக்கு - நீதிமன்றம் மூலம் செலுத்த வேண்டும்.
நிலுவை அபராதத்தை சரிபார்த்து செலுத்த ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது.
ஒரே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு உயர்த்தப்பட்ட அபராதம், ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் அல்லது ரத்து உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்

1. ICF இணைப்பு காவல் உதவி மையம் K2 அயனாவரம்
2.மியூசிக் அகாடமி காவல் உதவி மையம் - E2 ராயப்பேட்டை
3.கிரீன்வேஸ் சாலை சந்திப்பு காவல் உதவி மையம் - E4 அபிராமபுரம்
4.இராயப்பேட்டை மணி கூண்டு சந்திப்பு காவல் உதவி மையம்
5.அண்ணா நகர் ரவுண்டானா போக்குவரத்து காவல் உதவி மையம்
6.அண்ணா வளைவு போக்குவரத்து காவல் உதவி மையம்
7.மதுரவாயல் அழைப்பு மையம் - மதுரவாயல் காவல் நிலைய வளாகம்
8.மாதவரம் போக்குவரத்து காவல் நிலையம் (மாதவரம் ரவுண்டானா)
9.பூக்கடை அழைப்பு மையம் - C2 யானைகவுனி காவல் நிலைய தரைதளம்
10.வண்ணாரப்பேட்டை அழைப்பு மையம் - H5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய 2-வது தளம்
11.புளியந்தோப்பு அழைப்பு மையம்- K1 செம்பியம் காவல் நிலைய 2வது தளம்
12.தி.நகர் அழைப்பு மையம் - R1 மாம்பலம் காவல் நிலைய வளாகம்
13.அடையாறு அழைப்பு மையம் -J2 அடையாறு காவல் நிலைய வளாகம்
14.புனித தோமையர்மலை மையம் - கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்
15. தலைமையகம்-ITMS தலைமையகம், காவல் ஆணையாளர் அலுவலகம் 7-வது தளம், வேப்பேரி, சென்னை-7

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks