தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!

தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
News Image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

5 முனைப் போட்டி:

ஆளுங்கட்சியான தவெக தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை நடத்தி வரும் நிலையில், இந்த இரு தொகுதிகளின் வெற்றி மிக மிக அவசியம் ஆகும். இந்த இடைத்தேர்தலில் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழர் - இந்திய கம்யூனிஸ்ட் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் ஆளுங்கட்சி என்ற அந்தஸ்துடன் தவெக களமிறங்கினாலும் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்று தனது பதவியை ராஜினாமா செய்து தவெக வேட்பாளராக முன்னாள் அதிமுக எம்எல்ஏ-க்களை களமிறக்கியிருப்பது தவெக-விற்கு பெரும் பின்னடைவாகவே உள்ளது.

இரு தொகுதியைப் பொறுத்தே மற்றவர்களுக்கு வாய்ப்பா?

மதுராந்தகத்தில் தவெக-விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், தாராபுரத்தில் தவெக-விற்கு கடும் எதிர்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. இதனால், தவெக-விற்கு தாராபுரம் சவால் மிகுந்ததாக மாறியுள்ளது.

இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் வெற்றியைப் பொறுத்தே எஞ்சியுள்ள தொகுதிகளில் பதவியை ராஜினாமா செய்து வந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கலாமா? வேண்டாமா? என்பது முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இதனால், பதவியை ராஜினாமா செய்து வந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ-க்கள் இந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஏனென்றால், ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தாலும் எஞ்சியுள்ள தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வில் தவெக தலைமை அதிரடியான முடிவு எடுக்க வாய்ப்பு நேரிடும் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

வெற்றி நெருக்கடி?

அதேசமயம், தனிப்பெரும்பான்மை இல்லாமல் களமிறங்கியுள்ள தவெக இந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தங்களது ஆதிக்கத்தை சட்டசபையில் நிலைநிறுத்த ஆர்வம் காட்டி வருகிறது. அதேசமயம் அரசுக்க ஆதரவாக நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சியே தவெக-விற்கு எதிராக இருப்பது அவர்களுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

அதிமுக சார்பில் வெற்றி பெற்று தற்போது தவெக சார்பில் வேட்பாளராக சத்தியபாமாவும், மரகதம் குமரவேலும் தொகுதியில் வாக்கு சேகரிப்பதற்கு சில இடங்களில் எதிர்ப்புகளும் குவிந்து வருகிறது.  குறிப்பாக, தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவிற்கு கடுமையான எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. இதனால், அருண்ராஜ், செங்கோட்டையன் தலைமையில் தவெக தீவிர பரப்புரையில் தாராபுரத்தில் ஈடுபட்டு வருகிறது.  தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் நாளை பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks