அதிமுக ஆட்சிக்காலத்தில் வேளச்சேரியில் அமைக்கப்பட்ட கால்வாய் ஒன்றை திமுக ஆட்சியில் மண்ணைப் போட்டு மூடி விட்டதாக அமைச்சர் குமார் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய தவெக அமைச்சர் குமார், ஒவ்வொரு அரசு கொண்டு வரும் திட்டங்களைப் பாதியில் கைவிடுவதால் ஏற்படும் விளைவுகள் பறி பேசினார்.

அதாவது, “நான் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஒரு 6 வயது சிறுவனும், 60 வயது முதியவரும் ஒரே புகாரைச் சொன்னார்கள். வேளச்சேரி மக்களுக்காக பணிபுரிவதற்காக உங்களை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். ஒரு முக்கியமான செய்தி என சொல்லி காணவில்லை என்று பல தகவலை கூறினார்கள். வேளச்சேரி மக்களுக்கு இடம் இருக்கிறது. ஆனால் பட்டா வழங்கப்படவில்லை. வீடு வழங்க ஆணை இருந்தும் அதனை கொடுக்க விடாமல் தடுக்க ஒரு கூட்டம் இருக்கிறது. தண்ணீர் இருக்கிறது, குடிதண்ணீர் இல்லை. ஃபைலில் ரோடு இருக்கிறது. ஆனால் சாலையில் இல்லை என்ற நிலை தான் இருந்தது.

இதனையெல்லாம் கண்டுபிடித்து தருவீர்கள் என்று கூறியதால் தான் உங்களை தேர்வு செய்துள்ளோம் என தெரிவித்தார்கள்.

குறிப்பாக 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட 13,448 அடி நீளத்திலான 4100 மீட்டரில் 20 அடி அகலத்தில் 6 மீட்டர் அளவில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாயை காணவில்லை என சொன்னார்கள். இதுதான் எனக்கு வந்த புகார் என்பதால் அதில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்தோம். அந்த கால்வாயை எதற்கும் பயன்படுத்தாமல் அதன்மேல் 6 அடிக்கு முழுவதுமாக மண்ணைப் போட்டு மூடி ரோடு போட்டு தண்ணீர் செல்வதை அடைத்து விட்டார்கள்.

2021ல் வந்த திமுக இவ்விவகாரத்தில் 2026 பொறுப்பற்ற முறையில் இருந்தது. 2026ல் தவெக ஆட்சி அமைந்த பிறகு அந்த கால்வாயை மீட்டு திறக்க வைத்துள்ளோம். இதன்மூலம் வேளச்சேரி மக்களுக்கு நல்லது செய்ய நினைத்துள்ளோம். இதற்கு காரணமாக முதலமைச்சர், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எந்தவொரு திட்டம் கொண்டு வந்தாலும் அதனை செயல்படுத்தாமல் பாதியில் கைவிடுவதால் மக்கள் படும் அவதியை இன்று காலையில் நான் என் தொகுதி வேளச்சேரியில் பார்த்தேன். இதை யாரும் எங்கும் இனி செயல்படுத்த வேண்டும். ஒற்றுமையோடு இருந்து மக்களுக்கு தேவையானதை இணைந்து செயல்படுத்துவோம். அதுதான் தவெக அரசின் கனவும் கூட என அமைச்சர் குமார் தெரிவித்துள்ளார்.

அவரின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில் உடனே எழுந்த அவை முன்னவர் செங்கோட்டையன், அமைச்சர் குமார் அவர் தொகுதி மக்களின் உணர்வுகளை கருத்துகளாக சொன்னார்கள். அதனை ஏற்று இந்த அரசு பணியாற்றும் என உறுதியளித்தார்.

Source: Read Full Article