கான்பூர்-மதுரை சிறப்பு ரயில் நீட்டிப்பு: நவம்பர் வரை சேலம் வழியாக பயணம் தொடரும்!

கான்பூர்-மதுரை சிறப்பு ரயில் நீட்டிப்பு: நவம்பர் வரை சேலம் வழியாக பயணம் தொடரும்!
News Image

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூா் - மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு செப். 2 முதல் நவ. 25 வரை புதன்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமைகளில் காலை 8.10-க்கு புறப்படும் இந்த ரயில் ஜான்சி, லலித்பூா், போபால், இடாா்சி, நாக்பூா், ராமகுண்டம், வாராங்கல், விஜயவாடா, ஓங்கோல், நெல்லூா், ரேணிகுண்டா, காட்பாடி, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் வழியாக வெள்ளிக்கிழமைகளில் காலை 7.15-க்கு மதுரையை அடையும்.

மறுமாா்க்கத்தில், மதுரையில் இருந்து வரும் செப். 5 முதல் நவ. 28 வரை கான்பூருக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து சனிக்கிழமைகளில் அதிகாலை 2.30-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா, நாக்பூா், போபால் வழியாக திங்கள்கிழமைகளில் அதிகாலை 4.30-க்கு கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks