சென்னை அடையாரில் தவெக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டது தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது எனவும், முதல்வரிடமே இந்தத் துறை இருக்கும் போது பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவது தமிழகத்திற்கு நல்லதல்ல எனவும் முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் நாடார் சங்க ஆண்டு விழாவில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்ததராஜன் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றம் நேரலையில் வருவது மகிழ்ச்சி எனவும், ஆக்கபூர்வமாக மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி எனவும், ஒரு விதத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை எனவும், மக்கள் சட்ட மன்றத்தை ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள், இன்னும் ஆரோக்கியமாக சட்ட மன்றம் நடக்க வேண்டும் என்பது தமது கோரிக்கை எனவும் தெரிவித்தார்.

நாளை காவல் துறை மானிய கோரிக்கைக்கு முதல்வர் பதில் கூற உள்ள நிலையில் தலைநகரில் தவெகவை சேர்ந்தவர் கொலை செய்திருப்பது கவலை எனவும், பாதுகாப்பு வேண்டும் என கட்சியில் சேர்ந்தவருக்கு ஆட்சியே பாதுகாப்பு தரவில்லை எனவும், தவெகவை சேர்ந்தவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார், தலை நகரில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது, முதல்வரிடமே இந்தத் துறை இருக்கும் போது பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் போது தமிழகத்திற்கு நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகியோர் வரூம் 9-ஆம் தேதி சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுகிறோம் எனக் கூறிவிட்டு அதில் பிரதம அமைச்சரை பற்றி பேசுவோம் என திருமாவளவன் சொல்கிறார் எனவும், எது எப்படி இருந்தாலும் தவெகவும் சரி, காங்கிரசும் சரி பிரதமர் வேட்பாளரை பற்றி பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை எனவும், இந்தியா மிக பாதுகாப்பாக இருக்கிறது எனவும், பெல்ஜியத்தை சார்ந்த அதிபர் இந்த நாடு முன்னேறி கொண்டிருக்கிறது 7.8% இந்த நாட்டை முன்னேற்றிக் கொண்டிருப்பவர் பாரத பிரதமர் என புகழ்ந்திருப்பதாகவும், இயற்கை பேரழிவுகள், போர் பேரழிவுகள் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு நாடு மற்ற நாடுகளுடன் வேகமாக முன்னேறி வருகிறது, அப்படி இருக்கும் போது வெறும் 100 நாட்களான ஒரு அரசாங்கத்தைச் சேர்ந்த முதலமைச்சர், பிரதமர் என முன்னிறுத்தி தோற்று தோற்று தோற்றுப் போய் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தப்பு என்னவென்றால் மோடியை முதல்வர் என சொல்லும்போது இவர் அறிவாலயத்தில் கூட்டத்தைக் கூட்டி ராகுல் காந்தி பிரதமர் என கூறினார் எனவும் கூறினார்.

21 மாநிலங்களில் பாஜக ஆண்டு கொண்டிருக்கிறது, தமிழகத்தில் மக்கள் முதலமைச்சருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள், தமிழக மக்களுக்கு முழுமையான சேவையை செய்வதற்கு முயற்சியை மேற்கொள்ளுங்கள் எனவும், ஒரு பக்கம் கொலை, ஒரு பக்கம் 45 நாட்கள் கழித்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது, காவிரியில் 3 தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்படுகிறார்கள், விவசாயிகள் இந்தியாவிலேயே அதிக கடன் சுமையில் தத்தளித்துக் தத்தளிக்கும் விவசாயிகள் யார் என்றால் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது எனவும்,ஆட்சிக்கு வந்து கொஞ்ச நாட்களிலேயே 30 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கியாகி விட்டது எனவும், கடன் வாங்கி மக்களுக்கு சேவை செய்கிறோம் என சொல்கின்றனர் எனவும்,

டாஸ்மாக்கில் பத்து ரூபாய்க்கான பதில் இன்னும் இல்லை அரசாங்கத்தில் கிடைக்கவில்லை எனவும், அரசாங்கம் டாஸ்மாக்கை மூடுகிறதா? இல்லையா தெரியவில்லை, ஆனால் டாஸ்மாக் ஊழியர்களே டாஸ்மாக்கை மூடிவிடுவோம் என குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனவும், ஒருபுறம் தூய்மை பணியாளர்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள், செவிலியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், இவ்வளவு பிரச்சினை வைத்துக் கொண்டு அதை தீர்க்காமல் யார் பிரதமர் என விவாதித்துக் கொண்டிருப்பது போகாத ஊருக்கு வழியைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் எனவும் கூறினார்.

கூட்டணி கட்சிகளும் ஒட்டிக்கிட்டு இருந்தால் போதும் காங்கிரஸ் பொருத்தமட்டில் ராகுல் பிரதமர் என சொல்லவில்லை என்றால் ஆட்சி விட்டு வெளியே வந்து விடுவோம் என கூறுகின்றனர் எனவும், காவிரிக்கு இப்படி கூறினார்களா? தமிழ்நாட்டுக்கு சட்ட ஒழுங்கு சரியில்லை என அறிக்கை விட்டு வெளியே சென்றீர்களா எனவும் அவர் கூறினார்.

வெங்காயம் 35 ரூபாய்க்கு எல்லா ரேஷன் கடைகளிலும் போடப்படுகிறது, போர்க்கால அடிப்படையில் நாசிக்கில் இருந்து பாரத பிரதமர் வழிகாட்டுதலில் எல்லா மாநிலங்களுக்கும் காந்தா எக்ஸ்பிரஸ் மூலம் எல்லா இடங்களுக்கும் வெங்காயத்தை கொண்டு வந்து இறக்கி வைத்து வெங்காய பிரச்னை தீர்ந்துள்ளது என்றார்.

தமிழகத்தில் அயோத்தியா அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக ரேஷன் கடைகளில் சாமானிய மக்களுக்கும் கிடைக்கின்ற அரிசியில் பாரத பிரதமரின் பங்கு இருக்கிறது எனவும், எல்லாவற்றிலும் மத்திய அரசு தமிழக மக்களுக்கு வெளிநாடு வெளிநாட்டில் ஒரு பெண் துன்பப்படுத்தப்படுகிறார் என கூறிய நிலையில் ஒரே நாளில் அவர் மீட்கப்பட்டிருக்கிறார் எனவும், யாத்திரைக்கு சென்ற சென்றவர்கள் மிக பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கிறார்கள், மிகத் துரிதமாக மத்திய அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறது எனவும், பாரதப் பிரதமரை போலவும் யாரும் செயலாற்ற முடியாது எனவும் கூறினார்.

7.8 சதவீத பொருளாதார முன்னேற்றத்தை குறை சொல்லி கொண்டிருப்பவர்கள் உலக வங்கியில் சதவீதத்தை இந்தியா பெற்று இருக்கிறது என உலக வங்கி தலைவர் கூறுகிறார்,இதை உலகில் வேறு எந்த நாடும் பெறவில்லை என உலக வங்கி தலைவர் கூறுகிறார் எனவும், அதனால் 2.6 சதவீதம் தான் காங்கிரஸ் கொண்டு வந்தது எனவும், பாரதப் பிரதமர் மோடி மிக பலமான பிரதமராக வளம் வந்து கொண்டிருக்கிறார் நம் நாட்டில் மட்டுமல்ல உலக அரங்கிலும்.அதனால் தமிழ்நாட்டில் பிரதமர் யார்,நாம் பிரதமர் ஆகலாமா என்று விவாதங்கள் எல்லாம் விட்டு விட்டு பலமான பிரதமர் நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார், மக்கள் தமிழகத்திற்கு ஒரு வாய்ப்பை டுத்திருக்கிறார், அதை சரியாக பயன்படுத்துங்கள் என்பது என்னுடைய கோரிக்கை எனவும்,

இன்னும் அதிகமாக நாளை வந்து பேசுகிறேன் என முதல்வர் கூறுகிறார், திரை துறையில் இருந்து அரசியல் துறைக்கு மாறிவிட்டார்,சட்ட மன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பதில் சொல்ல வேண்டும் என்பது முதலமைச்சர் முயற்சி செய்ய வேண்டும்; இதுதான் நமது கருத்து எனவும்,

அரசியலுக்கு வந்து விட்ட போது ஒரு முதலமைச்சரராக பதில் சொல்வது மக்கள் எதிர்பார்ப்பார்கள்,நான் எதிர்பார்த்தேன் என்று சொல்லவில்லை எனவும், மக்கள் எதிர்பார்ப்பார்கள் எனவும், திரைப்படத்தோட 2-வது பார்ட், பசீரியலொட 3-வது பார்ட் கிடையாது, சட்ட மன்றமாக சட்ட மன்றத்தின் மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும்,

சட்ட மன்றம் என்பது அனைவரும் மரியாதையாக விவாதிக்கக்கூடிய இடமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், சட்ட மன்றம் போலவே பாராளுமன்றத்தில் காங்கிரஸ் திமுக போன்றவர்கள் 96 மணி நேரம் லோக்சபாவில் வீணாகி இருக்கிறது எனவும், 17 மணி நேரம் மட்டும் தான் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் எனவும்,

லோக் சபாவில் ராஜ்யசபாவில் 36 மணி நேரத்தில் மட்டும் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள், 56 மணி நேரம் வீணாகி இருக்கிறது எனவும், இதில் தொகுதி மறுவரை வந்தால் எங்களால் பேச முடியாது கொடுக்கும் வாய்ப்பை யாரும் பேசவில்லை எனவும்,

தொகுதி மறு வரை வந்தால் தமிழகத்திற்கு 20 பாராளுமன்ற தொகுதிகள் அதிகமாக கிடைக்கும் எனவும், அதிகமாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 200 பாராளுமன்ற ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும், தொகுதி மறுவரையும் எல்லோரும் ஆதரிக்க வேண்டும், ஏனென்றால் பெண்கள் முன்னேற்றத்திற்கானது தொகுதி மறுவறையை எதிர்ப்பவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு எதிரானவர்கள் என குற்றம் சாட்டுகிறேன் எனவும், அதனால் மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் நேரு மீது ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளதால் சோதனை நடைபெற்றது எனவும், மடியில் கனமில்லை என்று வழியில் பயம் எதற்கு எனவும்,குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் சோதனை நடத்தினார்கள் எனவும் கூறினார்.

யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் சமம் எனவும், அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என தமிழிசை பதிலளித்தார்.நாங்கள் கட்சியில் பலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பருந்துர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டு கும்மிடிப்பூண்டி செய்யூர் பகுதிகளில் விமான நிலையம் அமைக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு இவை சரி இல்லை என கூறி தான் வேண்டிய அளவு இணைப்பு வசதி இல்லை ஆராய்ந்து தான் பறந்து தேர்ந்தெடுக்கப்பட்டது எனவும், 5700 ஏக்கர் தேவையாக இருந்தது, அதில் 1700 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது, பணமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், சிப்காட்டை கொண்டு வருவோம் என கூறுகின்றனர் எனவும்,ஏற்கனவே நிறைய சிப்காட் உள்ளதாகவும், பரந்தூர் விமான நிலைய திட்டம் ரீ திங் செய்தால் கூட தப்பு கிடையாது என்பது தம்முடைய கருத்து எனவும் தெரிவித்தார்.

பரந்தூர் போன்ற விமான நிலையம் தமிழ்நாட்டில் தேவை அதைப் பற்றி பேசுவது என்றால் விவசாயிகளுக்கு எதிரானவர் அல்ல அவர் அவர்களும் மேம்பட வேண்டும் எனவும், விவசாய நிலமே இல்லாமல் இந்த இடத்தை எடுக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி எனவும்,பரந்தூர் விவசாயிகளுடன் க இருக்கிறேன் என்று கூறும் நீங்கள் மற்ற விவசாயிகளின் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யவில்லை எனவும்,

40 தான் தண்ணீரை விடுவேன் என்கிறீர்கள் சம்பா பயிருக்கு 120 நாள் தண்ணீர் தேவை, எப்படி அந்த மக்களுக்கு சென்று சேரும் எனவும், 90 அடி வரும் போது தண்ணீர் திறந்து விட வேண்டும் கூறினார்கள், ஆனால் 100 அடிக்கு இருக்கும் போது திறந்து விட்டால் தான் 4 நாட்களிக்கு பிறகு இப்போது தான் கல்லணைக்க வந்திருக்கிறது எனவும், ஆனாலும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் விவசாயத்தை கிகிடைக்கவில்லை அரசு என்ன செய்யப்படுகிறது எனவும்,

ஏற்கனவே குருவை சாகுபடி செய்கிறார்கள் இழுப்பீடு வழங்க வேண்டும்,அனைத்தும் பேச்சு வழக்கில் உள்ளது போன்று இருக்கிறது எனவும், நீட் விலக்கு அளிக்க முடியாது எனவும், அரசு பள்ளியில் படித்தவர்கள் 40 பேர் இருந்த நிலையில் இப்போது 500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் எனவும், தோல்விக்கு அதையே பேசிக்கொண்டு இல்லாமல் தற்கொலை கவலையோடு பேசிக்கொண்டிருக்கும் தன்னம்பிக்கை கதையை பேச வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முதல்வராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த நான் எந்த காரணத்திற்காகவும் கல்வியை அரசியலாக்கியது கிடையாது என பிரதமர் மோடி கூறியிருக்கிறார் எனவும், அதனால் தான் குஜராத் முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும்,தமிழகத்தில் கல்வியை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் எனவும், நம் நாடு தமிழகத்தில் முன்னாள் ஈடி குறித்து தம்மிடம் கேட்க வேண்டாம் எனவும் தெரிவித்த அவர், விண்வெளித்துறை தனியார்மயமாக்கப்படவில்லை, எங்கு வேண்டுமோ தனியார் பங்களிப்பு வேண்டும் எனவும், அதானி அம்பானி காங்கிரஸ் ஆட்சி செய்கின்ற கம்யூனிஸ்ட் ஆட்சி செய்த இடத்தில் தான் அதிக முதலீடு செய்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

Source: Read Full Article