“விசிகவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்தால் தவெக காலி!” - பாஜக அஸ்வத்தாமன் பரபரப்பு பேச்சு

“விசிகவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்தால் தவெக காலி!” - பாஜக அஸ்வத்தாமன் பரபரப்பு பேச்சு
News Image

விழுப்புரம் : விசிகவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்து தமிழக வெற்றி கழகத்த்தை அழித்துவிடுவார்கள் என்றும் திமுக என்றாலே ஆபாசம் எழுதி வைத்து படிக்கவில்லை என்றால் உதயநிதியும் ஆபாசமாக தான் பேசுவார் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தை திறந்து வைத்தபின் பேட்டியளித்த பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன்,

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து தலைவிரித்தாடுதாகவும், திருவொற்றியூர் பகுதியில் இளைஞர் ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்த அடுத்த நாளே கொலை செய்யப்படுகிறார். இது திமுக ஆட்சியில் கூட நடைபெறவில்லை,காவல்துறையினருக்கு முதலமைச்சர் மீது பயமில்லை, பொதுமக்கள் காவல்துறைக்கு சென்று புகார் அளிக்க பயப்படுகிறார். இது திமுக ஆட்சியில் இருந்து தவெக ஆட்சியிலும் தொடர்வதாக தெரிவித்தார். முதல்வர் விஜய் லண்டன் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளார். அது யாருடைய பணத்தில் சென்றார் என்று தெளிவுபடுத்த வேண்டும் என்றும்

மத்திய அரசு அரிசி வாங்குவதற்கு தரப்படுகிற பணம் வீணடிக்கபடுகிறது. நல்ல ஆட்சியை தவெக நடத்த வேண்டும் நிறைய நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் போதை பொருள் பரவல், லாக்கப் மரணம் குறித்து தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் கனிமொழி திமுகவினர் நாவடக்கமாக பேச வேண்டும் என்கிறார் திமுக என்றாலே ஆபாசம் தான் என்றும்

உதயநிதி பேப்பரில் எழுதி வைக்காமல் பேசினால் ஆபாசமான வார்த்தைகள் தான் வரும் ஏனென்றால் குடும்பம் அது போன்றது என விமர்சனம் செய்தார்.

எதிர்கட்சி வரிசையில் பாஜக அமர்ந்திருந்தால் நல்ல கேள்விகளை கேட்டிருப்போம் திமுக அமர்ந்ததால் தவெக அவர்களை அடித்து தள்ளி விடுவதாகவும், மின்கட்டண உயர்வு குறித்து திமுக கேள்வி கேட்பதில்லை என தெரிவித்த அவர் பாஜகவிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பு வீ த லீடர் என்ற அமைப்பு பாஜகவில் உள்ள தலைவர்கள் மீது வன்மங்களை தூவி வருவதாகவும், திருவண்ணமாலையில் வீ த லீடர் அமைப்பை சார்ந்த நபர் தன்மீது வேண்டுமென்றே பணம் வாங்கியதாக அவதூறு பரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பவே கூடாது ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக திமுகவுடன் இருந்தார்கள் இன்று தவெகவுடன் உள்ளார்கள்

விசிகவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்து தவெகவை அழித்துவிடுவார்கள், தமிழக வெற்றிக்கழகம் வந்ததிலிருந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து வருகிறது. மின் மிகை மாநிலமாக உள்ள தமிழகத்தில் மின் வெட்டு ஏற்படுகிறது மின்வெட்டு இல்லை என முழு பூசனிக்காயை சப்பாட்டில் மறைக்கிறது போல அமைச்சர் தெரிவிக்கிறார்.

மின்வெட்டு தொடர்பாக விரைவாக பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தப்பட்டால் தான் தமிழ் கட்டாயப்படுத்தப்படும் அது வந்ததால் தான் தமிழ் கட்டாயமாகும் என கூறினார்.

தவெக மட்டுமல்ல பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் படிப்பதில் பிரச்சனை உள்ளது.தமிழை கட்டாயமாக படித்து வந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது. தவெகவிற்கு எதிரான நிலைபாட்டினை கம்யூனிஸ்ட்டுக்கள் எடுத்துவிட்டார்கள் ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் எடுக்கவில்லை ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் பக்கம் நிற்கிறார்கள் இது சந்தர்ப்பவாத அரசியல் என்பதை காட்டுவதாக குற்றஞ்சாட்டினார். மின்வெட்டு ஏற்படுவதாக அஸ்வத்தாமன் தெரிவித்தபோது மின்வெட்டு ஏற்பட்டால் செய்தியாளர் சாந்திப்பில் சிரிப்பலை ஏற்பட்டது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks