சாலமன் பாப்பையா பெயரை அவர் வாழ்ந்த தெருவுக்கு சூட்ட தீர்மானம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் – மேயர் (பொ) தி. நாகராஜன் அறிவிப்பு.

பேராசிரியர் சாலமன் பாப்பையா

மறைந்த பட்டிமன்றப் பேச்சாளரும் பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியருமான சாலமன் பாப்பையாவின் நினைவாக, அவர் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரைச் சூட்ட மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று மேயர் (பொ) தி. நாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா செப்டம்பர் 11-ஆம் தேதி தனது 90-ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிலும், பட்டிமன்றப் பேச்சாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் மதுரை ஞானஒளிபுரத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது மனைவி ஜெயபாய் நல்லடக்கம் செய்யப்பட்ட மதுரை புட்டுத்தோப்பு சாலையில் உள்ள வெப் மெமோரியல் சர்ச்சுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதிப் பிரார்த்தனை நடைபெற்றது.

தீர்மானம் மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

இதையடுத்து இறுதி ஊர்வலமாக தத்தனேரி மின் மயானத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று சாலமன் பாப்பையாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தத்தனேரி மின் மயானத்தில் தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு, காவல்துறையினரின் கௌரவ மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவர் வாழ்ந்த தெருவுக்கு பெயர் சாலமன் பாப்பையாவின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்திய மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி. நாகராஜன், அவரது நினைவாக அவர் வாழ்ந்த தெருவுக்கு சாலமன் பாப்பையாவின் பெயரைச் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கான தீர்மானம் மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

பட்டிமன்றக் கலைக்கும் சாலமன் பாப்பையா ஆற்றிய பங்களிப்பு

தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்திற்கும், பட்டிமன்றக் கலைக்கும் சாலமன் பாப்பையா ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. “அன்பு பெரியோர்களே… அருமை தாய்மார்களே…” என்ற தனது தனித்துவமான குரலால் பட்டிமன்றங்களைத் தொடங்கி, எளிய தமிழில் இலக்கியத்தையும் சமூகக் கருத்துகளையும் கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்த்த அவரது நினைவைப் போற்றும் வகையில், அவர் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். மதுரையுடனும், தமிழ் மக்களுடனும் சாலமன் பாப்பையா கொண்டிருந்த நெருக்கமான தொடர்பை நினைவுகூரும் வகையில் இந்த நடவடிக்கை அமையும் என்று (பொ) மேயர் தி. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article