Asian Games: சிங்கப்பெண்களும் நாங்கதான்.. தங்கப்பெண்களும் நாங்கதான்.. கோல்ட் மெடல் வாங்கிய இந்திய கிரிக்கெட் அணி!

Asian Games: சிங்கப்பெண்களும் நாங்கதான்.. தங்கப்பெண்களும் நாங்கதான்.. கோல்ட் மெடல் வாங்கிய இந்திய கிரிக்கெட் அணி!
News Image

ஜப்பானில் மகளிர் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டும் 2010ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இறுதிப்போட்டி:

ஆசியாவில் உள்ள அணிகள் பங்கேற்ற இந்த போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டின் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஷபாலி வர்மா - ஸ்மிரிதி மந்தனா ஆட்டத்தை தொடங்கினர்.

ஷபாலி - ஸ்மிரிதி - ரிச்சா அசத்தல்:

இருவரும் இணைந்து இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஆசிய கோப்பைத் தொடரிலும் இறுதிப்போட்டியில் இலங்கையுடன் ஆடியிருந்ததால் இந்திய அணி அவர்களது பந்துவீச்சை திறம்பட கையாண்டனர். சிக்ஸரும், பவுண்டரியும் இருவரும் விளாச 10 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை நெருங்கியது. 29 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 48 ரன்கள் எடுத்திருந்த ஷபாலி 48 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து வந்த ஹர்மன்ப்ரீத் கவுர் பொறுப்பாக ஆடினார். மறுமுனையில் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசிய ஸ்மிரிதி மந்தனா அரைசதம் விளாசி அசத்தினார். 17 பந்துகளில் 19 ரன்கள் விளாசிய ஹர்மன்ப்ரீத் கவுர் அவுட்டாக அடுத்து வந்த ரிச்சா கோஷ் ஆட்டத்தில் அனல் வேகம் கூட்டினார்.

217 ரன்கள் டார்கெட்:

ஸ்மிரிதி மந்தனா 45 பந்துகளில் 5 பவுண்டரி 7 சிக்ஸருடன் 79 ரன்கள் எடுத்து அவுட்டாக ரிச்சா கோஷ் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். அவர் 22 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது.

217 ரன்கள் எடுத்தால் தங்கம் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கைக்கு இந்திய வீராங்கனைகள் பந்துவீச்சில் குடைச்சல் அளித்தனர். கிரந்தி, நந்தனி ஷர்மா, தீப்தி ஷர்மா குடைச்சல் அளித்தனர். ஷபாலி வர்மா யாருமே எதிர்பார்க்காத வகையில் பந்துவீசி இலங்கையின் முதல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, வந்த கவிஷா 11 ரன்னில் அவுட்டாக இலங்கை தடுமாறியது. கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான சமாரி அட்டப்பட்டு மட்டும் தனி ஆளாக ரன்களைச் சேர்த்தார். அவர் 21 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து அவுட்டாக, மீண்டும் சீட்டுக்கட்டு போல இலங்கை சரிந்தது. விக்கெட் கீப்பர் கெளசனி மட்டும் 14 ரன்கள் எடுக்க இலங்கை 69 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தங்க மங்கைககள்:

இதனால், இந்திய அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி இதன்மூலம் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது. இந்திய அணிக்காக தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளும், ஷபாலி வர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ஸ்ரீசரணி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks