Anbil Mahesh: அதெல்லாம் முடியவே முடியாது.. கைவிரித்த கோர்ட்.. சிக்கிலில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்?

Anbil Mahesh: அதெல்லாம் முடியவே முடியாது.. கைவிரித்த கோர்ட்.. சிக்கிலில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்?
News Image

திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கு மேல்  வசூலித்து மோசடி செய்ததாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பல பள்ளிகளின் நிர்வாகிகள் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

அந்த புகாரின் அடிப்படையில்  விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு ஜூன் 27ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அதில் திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாகஅன்பில் மகேஸின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 9 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு  சம்மன் அனுப்பியதை அடுத்து செப்டம்பர் 18ம் தேதி விசாரணைக்கு ஆஜராகினார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில், தனக்கு எதிராக 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன்: அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, அரசகுமார் என்பவர் தனியாக அலுவலகம் அமைத்து பணம் வசூலித்துள்ளார். இந்த துறைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் தான் இருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் இடைக்கால நிவரணம் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது

இதுதொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி இந்த மனு மீது எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது.  கைது செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பித்தால், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவில் எப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பும். ஆகையால்  இடைக்கால உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்க முடியாது. தேவைப்பட்டால் முன்ஜாமீன் தாக்கல் செய்யுங்கள் என கூறினார். மேலும் அன்பின் மகேஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க சென்னை காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks