கேரளாவின் திருச்சூர் அருகே நடந்த கோர விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூரில் கைபமங்கலம் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதி கோர விபத்து நடந்துள்ளது. உயிரிழந்த 7 மாணவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பிஎஸ்என்ஏ கல்லூரியில் படித்து வந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழப்பு

மத்திய கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது. வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11.40 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைப்பமங்கலம், பனம்பிக்குன்னுவில் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியுடன், இளைஞர்கள் காரில் பயணித்த கார் மோதியதாக காவல்துறை கூறியது. காரில் இருந்த எட்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

STORY | Eight killed as car rams into parked lorry in Keralam’s Thrissur

Eight people, believed to be students from neighbouring Tamil Nadu, have been killed in a tragic road accident in central Keralam's Thrissur district, police said on Saturday.

READ: https://t.co/PSaeLyLfQS… pic.twitter.com/q4p095dcCY

— Press Trust of India (@PTI_News) September 5, 2026

உள்ளூர் மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து, வாகனத்தில் சிக்கியவர்களை வெளியே மீட்கும் மீட்புப் பணியை மேற்கொண்டனர். பின்னர் உடல்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. விபத்து நடந்தபோது, அந்த வாகனம் குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூரை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

வாகனங்களை திருப்பி விட்டதால் நேரிட்ட விபத்து?

நெடுஞ்சாலையில் கட்டுமான பணி நடந்து வருவதால் பனம்பிக்குனு என்ற இடத்தில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. மாற்று பாதையின் அருகே நின்றிருந்த லாரி மீது அதிவேகமாக சென்று மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த யுவ சஞ்சித், மதுரையைச் சேர்ந்த பிரசன்னா, சந்தோஷ், சேலத்தைச் சேர்ந்த விஷ்வா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 7 மாணவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பிஎஸ்என்ஏ கல்லூரியில் படித்து வந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Source: Read Full Article