திருப்பத்தூர் ஏரியூரில் 700 ஆண்டு கல்வெட்டு: தெலுங்கு மன்னன், வணிகக்குழு ரகசியம்!

திருப்பத்தூர் ஏரியூரில் 700 ஆண்டு கல்வெட்டு: தெலுங்கு மன்னன், வணிகக்குழு ரகசியம்!
News Image

சிவகங்கை திருப்பத்தூரை அடுத்த ஏரியூர் மலையில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு.

பழமையான கல்வெட்டு

இந்தியத் தொல்லியல் துறை அலுவலர் முத்துக்குமார், ஏரியூர் மலைப்பகுதியில்19 ஆண்டுகளுக்கு முன்னாள் கல்வெட்டு ஒன்றை பார்த்ததாக தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவரோடு இணைந்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர், புலவர் கா. காளிராசா, தொல்லியல் மாணவர் கருணாகரன், சோழபுரம் பாலசுந்தரம், ஏரியூரைச் சேர்ந்த சஞ்சீவி நாதன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா தெரிவித்ததாவது..," ஏரியூர் மருந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ள மலையில் உலகம்பட்டி பகுதியில் இருந்து மலைக்குச் செல்லும் பாதையின் காட்டுப் பகுதியில் வணிகக் குழுவின் பெயரை கால் வாய்க்கு வைத்துள்ள பழமையான கல்வெட்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாய்க்காலுக்கு ஆயிரத்தைந்நூற்றுவன் எனும் பெயர் சூட்டப்பட்டப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஸ்வஸ்தி ஸ்ரீ என்னும் மங்களச் சொல்லோடு தொடங்கும் இக்கல்வெட்டில் வடுகக்கம்பனன் எனவருவதால் இது தெலுங்குக் கம்பனனை குறிப்பதாகக் கருதலாம். மேலும் முனையத் தரையர் என்பது சோழ, பாண்டியர் கால அரசு அலுவலர்களைக் குறிக்கும் சொல்லாகும் ஆகவே தெலுங்கு மன்னனான கம்பனனின் அலுவலரால் இக்கல்வெட்டு வழங்கப்பட்டு இருக்கலாம். பருஷை என்பது  'பரிஷத்'எனும் சமஸ்கிருதச் சொல்லின் தமிழ்த்திரிபாகும். இதற்கு மதிப்பியல் முதன்மைக்குழு, அல்லது பெருமக்கள் சபை என்று பொருள், கோயில்களுக்குச் சொந்தமான அறக்கட்டளைகள், நிலங்கள், மற்றும் மூலப்பொருள்களைப் பாதுகாத்து மேலாண்மை செய்யும் பிராமணர்கள் அல்லது சான்றோர்கள் அடங்கிய சபையை மூலப் பருஷையார்' என்று வழங்குவர். அப்படி அவர்கள் நிர்வகிக்கக்கூடிய நல்லூர் குளத்துக்கு பாய்கிற வாய்க்காலுக்கு ஆயிரத்தைந்நூற்றுவன் எனும் பெயர் சூட்டப்பட்டப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆயிரத்தைந்நூற்றுவர், ஆயிரத்தைந்நூற்றுவர் எனும் சொல்லானது, திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்", "நானாதேசிகள் என அழைக்கப்படும் வணிகக்குழுக்களுக்கான பெயராகும்.

இக்கல்வெட்டில் ஆயிரத்தைந்நூற்றுவன் எனும்பெயர் கால்வாய்க்கு சூட்டப்பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

கல்வெட்டு வரிகள்.

1.ஸ்வஸ்தி ஸ்ரீ வடுக

2.கெம்பனானமுனை

3.யதரைமாலைபரு

4.ஷைநல்லூர்க்

5.குளத்துக்குப்பா

6.ய்கிற இக்காலின்

7.பெர் ஆயிரத்தை

8.நூற்றுவன்.

கல்வெட்டுச் செய்தி.

தெலுங்கு கம்பனனின் அலுவலர் முனைய தரையர், மலையை ஒட்டியுள்ள பருஷை சபையினரால் நிர்வகிக்கக்கூடிய நல்லூர் குளத்திற்கு செல்கிற வாய்க்காலுக்கு ஆயிரத்தைந்நூற்றுவன் என்னும் வணிகப் பெயரை சூட்டியதை குறிப்பிடுகிறது,

மேலும் கல்வெட்டில் மலை என்பது மாலை என தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம், மலை பருஷை நல்லூர் என்பது பொருத்தமாக வருகிறது, எனத் தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks