50 ஆண்டுகள்... ஒரு சந்திப்பு... ஆயிரம் நினைவுகள்! கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்ட பள்ளி நண்பர்கள்!

50 ஆண்டுகள்... ஒரு சந்திப்பு... ஆயிரம் நினைவுகள்! கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்ட பள்ளி நண்பர்கள்!
News Image

தஞ்சாவூர்: “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே... நண்பனே...” என்ற பாடல் வரிகள் ஒலிக்க, 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் ஒன்றாக ஓடிய நண்பர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிய காட்சி தஞ்சையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காலம் மாறினாலும் நட்பு மாறாது என்பதை உணர்த்தும் வகையில், அரை நூற்றாண்டுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள் ஆடிப்பாடி தங்களது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தஞ்சையின் முதல் ஆங்கில வழிப் பள்ளியாக விளங்கும் தூய பேதுரு பள்ளியில், 1976-ம் ஆண்டு பழைய எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றுகூடும் வகையில் ரீயூனியன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் 60-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பலரும் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டனர்.

அடையாளம் தெரியாமல் தடுமாறிய நண்பர்கள்!

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததும் பலரும் முதலில் அடையாளம் காண முடியாமல் தடுமாறினர். வயது முதிர்ந்த தோற்றத்தில் இருந்த நண்பர்களை பார்த்து, “இவர் யாராக இருப்பார்?” என்று சில நொடிகள் குழப்பத்துடன் பார்த்தனர்.

ஆனால், ஒவ்வொருவரும் தங்களது பெயரை சொல்லத் தொடங்கியதும் அந்தக் குழப்பம் அப்படியே காணாமல் போனது.

“டேய்... மாதவராஜ்! நீ விக்டர்தான?” என்று ஒருவர் கேட்க, அடுத்த நொடியே இருவரும் கட்டித்தழுவிக் கொண்டனர். அந்த அணைப்பில் 50 ஆண்டுகளாக மறைந்திருந்த பள்ளிக்கால நட்பும், பாசமும் மீண்டும் உயிர்பெற்றது.

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டபோது சிலரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. இன்னும் சிலர் பழைய குறும்புகளை நினைவுகூர்ந்து விழுந்து விழுந்து சிரித்தனர்.

பாடலான பள்ளிக்கால நினைவுகள்!

இதையடுத்து, “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே... நண்பனே...” என்ற பாடலை பாடி, பள்ளி நாட்களை நினைவுகூர்ந்தனர்.

அதேபோல், “முஸ்தபா... முஸ்தபா... பாடி திரிந்த பறவைகளே...” என்ற பாடலையும் உற்சாகத்துடன் பாடி ஆடினர். சிலர் பாடலுக்கு ஏற்ப நடனமாட, மற்றவர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

50 ஆண்டுகளுக்கு முன்பு வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்தது, இடைவேளையில் விளையாடியது, ஆசிரியர்களிடம் வாங்கிய பாராட்டு மற்றும் கண்டிப்பு, பள்ளி விழாக்கள், நண்பர்களுடன் செய்த குறும்புகள் என ஒவ்வொரு நினைவாக பகிர்ந்து கொண்டனர்.

ஆசிரியர்களுக்கு மரியாதை... நெகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்!

இந்த ரீயூனியன் நிகழ்ச்சியின் முக்கியமான தருணமாக, தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.

ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்த மாணவர்கள், பின்னர் அவர்களது காலில் விழுந்து ஆசி பெற்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை மீண்டும் நேரில் சந்தித்ததில் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒரு காலத்தில் ஆசிரியரின் முன்னால் மாணவர்களாக நின்றவர்கள், இன்று குடும்பம், பணி, வாழ்க்கை என பல்வேறு பொறுப்புகளை கடந்து மீண்டும் அதே பள்ளி நண்பர்களாக ஒன்றாக நின்றனர். வயது 60-ஐ கடந்திருந்தாலும், அந்த சில மணி நேரங்களில் அனைவரும் மீண்டும் தங்களது பள்ளி பருவத்திற்கே திரும்பியதைப் போல இருந்தது.

50 ஆண்டுகள் பிரித்தாலும்... நட்பை காலம் பிரிக்க முடியாது என்பதை உணர்த்திய இந்த ரீயூனியன் சந்திப்பு, பங்கேற்ற அனைவருக்கும் மறக்க முடியாத நாளாக அமைந்தது. பிரிவின் வலி இல்லாமல், மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியோடும், பழைய நினைவுகளின் நெகிழ்ச்சியோடும், நண்பர்கள் அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு தங்களது சந்திப்பு தருணங்களை கொண்டாடினர்.

தஞ்சையில் நடைபெற்ற இந்த “50 ஆண்டுகளுக்குப் பிறகான நண்பர்கள் சந்திப்பு”, அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரையும், முகங்களில் புன்னகையையும் ஒரே நேரத்தில் வரவழைத்த நெகிழ்ச்சியான நிகழ்வாக மாறியது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks