வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ

வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
News Image

இந்தியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தியன் வங்கி, எஸ்பிஐ, கனரா வங்கி என பல்வேறு வங்கிகளும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இது தொடர்பாக தகவல்களை அனுப்பி வருகின்றன. இந்நிலையில் வங்கி சேவைகள் முடங்கி விட கூடாது என்பதற்காக மத்திய அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கி பணி என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன. பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தொழிலாளர் துறையின் துணை ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால் வேலைநிறுத்தம் உறுதியாகியுள்ளது. பல்வேறு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வேலை நிறுத்தம் என்பதால் வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்து கொள்ளுங்கள் என குறுஞ்செய்திகளை அனுப்ப தொடங்கியுள்ளன. இதற்கிடையே செப்டம்பர் 26, 27 ஆகியவை சனி, ஞாயிறு அதன் பின் 28,29,30 ஆகிய மூன்று நாட்களும் தொடர் வேலை நிறுத்தம். எனவே தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மத்திய நிதி அமைச்சகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த வாரம் செப்டம்பர் 27ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் செயல்படும் என அறிவித்துள்ளது. ஏனெனில் தொடர்ந்து 3 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறுவதால் வங்கி சேவைகள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட கூடாது என்பதற்காக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடையில்லாமல் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் அரசு பொது துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவித்துள்ளது. வங்கிகள் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் சாமானிய மக்களுக்கு வங்கி சேவைகள் எந்த தடையும் இல்லாமல் கிடைப்பதற்கே அரசு முன்னுரிமை தருகிறது என நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளும் வழக்கம் போல செயல்படும். அதன் பின் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் என்பதால் வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று செய்ய வேண்டிய பணிகளை ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிப்பது நல்லது.

எனவே வங்கி கிளைக்கு சென்று முடிக்க வேண்டிய ஆவண பணிகள், கணக்கு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பிற சேவைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை செப்டம்பர் 27ஆம் தேதிக்குள்ளே செய்து முடிப்பது நல்லது. வங்கி கடன் விண்ணப்பம், தங்க நகை கடன், கடனை செலுத்தி நகையை மீட்பது, கேஒய்சி, வங்கி கிளை மாற்றம் ஆகிய பணிகளை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிப்பது  நல்லது. இல்லை எனில் அடுத்த வாரம் வியாழன் வரை காத்திருக்க வேண்டி இருக்கும்.வாடிக்கையாளர்களும் வணிக நிறுவனங்களும் காசோலை பரிவர்த்தனைகளை வேலைநிறுத்த காலத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். காசோலை எடுப்பது, காசோலை போட்டு பணம் பெறுவது என்பன உள்ளிட்ட வேலைகளை ஞாயிற்றுகிழமைக்குள் முடிப்பது நல்லது.

சொந்தமாக நிறுவனங்களை நடத்துவோர் சம்பளம் வழங்குதல், போன்ற முக்கியமான பணிகளை நிறுவனங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் கிளைகளின் நேரடி செயல்பாடுகள் மட்டுமே பாதிக்கப்படும். எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள மெசேஜில், யூபிஐ, மொபைல் பேங்கிங் , இணைய வங்கிச் சேவை, ஏடிஎம்கள் போன்ற சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என தெரிவித்துள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks