விழுப்புரம்: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குட்பட்ட பேரணி - மயிலம் யார்டு இடையேயான பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், செப்டம்பர் 3 முதல் 7-ஆம் தேதி வரை பல்வேறு ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, சில ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதுடன், சில ரயில்களின் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்படவும், சில ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் கூடுதல் நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படவும் உள்ளன.

தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில்

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் (66045), செப்டம்பர் 3, 4, 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் திண்டிவனம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இதனால், இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

அதேபோல், விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (66046), செப்டம்பர் 3 முதல் 7-ஆம் தேதி வரை விழுப்புரம் - திண்டிவனம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இதனால், இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு புறப்படும்.

வந்தே பாரத், வைகை ரயில்கள் தாமதமாக இயக்கம்

சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் விரைவு ரயில் (20665), செப்டம்பர் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - மதுரை வைகை அதிவேக விரைவு ரயில் (12635), செப்டம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சுமார் 110 நிமிடங்களும், செப்டம்பர் 6-ஆம் தேதி சுமார் 15 நிமிடங்களும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.

சிறப்பு ரயில்களிலும் மாற்றம்

சென்னை தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் சென்னை தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் (06109), வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 95 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.

சென்னை தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 4-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சென்னை தாம்பரம் - போடிநாயக்கனூர் சிறப்பு ரயில் (06059), சுமார் 90 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.

புதுச்சேரி ரயில்களிலும் பாதிப்பு

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் புதுச்சேரி - காக்கிநாடா துறைமுகம் கிர்கார் விரைவு ரயில் (17656), செப்டம்பர் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் புதுச்சேரி - கச்சிக்குடா விரைவு ரயில் (17654), செப்டம்பர் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சுமார் 140 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.

மேலும், புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் புதுச்சேரி - திருப்பதி பயணிகள் விரைவு ரயில் (16112), செப்டம்பர் 4-ஆம் தேதி சுமார் 25 நிமிடங்களும், செப்டம்பர் 6-ஆம் தேதி சுமார் 30 நிமிடங்களும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.

சென்னை கோட்டத்துக்குட்பட்ட பேரணி - மயிலம் யார்டு இடையேயான பொறியியல் பணிகளை முன்னிட்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால், மேற்கண்ட தேதிகளில் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மாற்றப்பட்டுள்ள ரயில் நேரங்களை கவனித்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source: Read Full Article