"மூட்டையில் சிக்கிய 11 கிலோ கஞ்சா"

சென்னை செங்குன்றம் காவல் சோதனை சாவடியில் வழக்கம் போல் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேக நிலையில் 2 பேர் முதுகில் மிகப் பெரிய மூட்டைகளுடன் நடந்து வருவதை பார்த்து தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். இதில், அவர்கள் இருவரும் விற்பனைக்காக 11,200 கிலோ கஞ்சா வைத்திருந்தது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது.

"ரயில் - பேருந்து மூலம் கஞ்சா கடத்தல்"

பின்னர் இருவரையும் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் பீர்பாரி ( வயது 25 ) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்குமார் ( வயது 30 ) எனத் தெரிய வந்தது. மேலும் இவர்கள் இருவரும் ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து செங்குன்றம் வரை அரசு பேருந்தில் கஞ்சாவை கொண்டு வந்துள்ளனர்.

அதற்கு மேல் வாகனத்தில் கஞ்சாவுடன் சென்றால் பிடிபட்டு விடுவோம் என அஞ்சி, இருவரும் மூட்டைகளாக சுமந்தபடி நடந்து சென்றுள்ளனர். மேலும் , இந்த கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து சில்லறை விற்பனையில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாக போலீசாருக்கு தெரிய வந்தது.

இது குறித்து செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து , ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்கு திட்டமிட்ட சந்தன்குமார், கிஷோர் பீர் பாரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11,200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article