மாம்பழ விவசாயம் குறித்து தவெக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை எனவும், வரும் ஜனவரி 22-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய 2 இடங்களில் மாம்பழ கூழ் தயாரிக்கும் ஆலைகளை நிறுவ வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாம்பழ விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சார்பில் திருவள்ளுரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈபடுபட்டனர்.

விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் துளசிநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மாங்கனி கூழ் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்க வேண்டும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாம்பழம் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். நடப்பாண்டில் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தண்ணீரில்லாமல் காய்ந்து போன மா மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாங்காய்க்கும் கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். மாமரத்திலேயே வேறொரு செடி வளர்ந்து மா மரத்தை அழிப்பதை தடுக்க உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துளசிநாராயணன், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் செய்து வரும் நிலையில கிலோவுக்கு 3 ரூபாய்க்கு கொள்முதல் செய்து பஜாரில் 30 ரூபாய்க்கு விற்கிறார்கள். அறுவடை செய்யும் கூலி கூட வரவில்லை எனவும் அங்கேயே கொட்டி விட நேர்கிறது எனவும்,

கடந்த 2 ஆண்டுகளாக கொடூரமான நிலைமை நீடித்து வருவதாகவும், இதற்கான மாற்று வழியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருத்தணியிலும் கும்மிடிப்பூண்டியிலும் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்கலாம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துவதாகவும், இதற்கான பணத்தை கூட்டுறவு ஆலைகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும், மா விவசாயிகள் பங்குதாரர்களாக ஆரம்பித்தால் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்யலாம் எனவும், விவசாயிகளை வாழ வைக்கும் நிலையில் தமிழக அரசு நகரும் என ஆலோசனையில் ஈடுபட்டதாகவும்,

ஜனவரி 22-ஆம் தேதி பெரும்திரள் ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைநகரங்களிலோ, சென்னை தலைநகரத்திலோ நகர முடிவெடுத்திருப்பதாகவும், மா விவசாயிகள் குறித்து வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு பேசவே இல்லை, தவெக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை, அவர்களை கவலைப்பட வைப்போம் எனவும், செய்யக்கூடிய போராட்டங்களை தான் அவர்கள் கவலைப்பட வைக்கும் எனவும்,

சித்தூர் மாவட்டத்தில் மா விவசாயம் நடந்து வருவதாகவும் விவசாயிகள் மாமரத்தை வெட்டி வருவதாகவும், மா விவசாயத்தில் இருந்து வெளியேறுவது வெளியேறுவது என்று கவலை தரக்கூடிய விஷயம் எனவும், மா விவசாயிகளை கூட்டுறவு ஆலைகளை வைத்து தொழிற்சாலைகளை திறக்க வேண்டும் எனவும், ஒரே ஆண்டில் பல லட்சம் டன் மாம்பழங்களை கொள்முதல் செய்ய முடியும் எனவும், இன்னும் மூன்று ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் நிலையில் 15 ரூபாய்க்கு வாங்க முடியும் கூட்டுறவு ஆலை திறப்பு பணம் இல்லை என பேச முடியாது எனவும், தமிழக அரசிடம் பணம் இல்லை என பேச முடியாது எனவும், பணம் எங்கே இருக்கிறது என நாங்கள் சொல்கிறோம் எடுப்பதற்கு அவர்கள் தயாராக இருந்தால் நாங்கள் எடுத்துக் கொடுத்து தமிழ்நாடு விவசாய சங்கம் தயாராக உள்ளது எனவும்,

குளிர்பானத்தில் 30 பைசா மாம்பழம் இருக்கிறதா எனவும், ஒரிஜினல் ஜூஸை நாங்கள் தருகிறோம் எனவும், அரசு கேட்பதற்கு தயாராக இருந்தால் ஆலோசனைகள் வழங்க தமிழ்நாடு விவசாய சங்கம் தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Source: Read Full Article