VCK Minister Vanniyarasu Slams DMK: பாஜகவை நோக்கிய விமர்சனங்களை கைவிட்டு, விசிகவை விமர்சிப்பதில் திமுக முனைப்பு காட்டுவதாக அமைச்சர் வன்னியரசு குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் வன்னியரசு ஆவேசம்..!

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் வன்னியரசு பங்கேற்றார். அதில் சிறப்புறையாற்றுகையில், “கடந்த காலங்களில் நாங்கள் திமுகவுடன் இணைந்து செயல்பட்டோம். ஆனால், இன்று நாங்கள் எடுத்துள்ள முடிவு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கானது. தமிழ் தேசிய அரசியல் நலனுக்கானது. தமிழர் உரிமைகள் நலனுக்கானது. கடந்த ஆட்சி எப்படி செயல்பட்டதோ, அதே கொள்கை கோட்பாட்டோடு தான் இந்த அரசும் செயல்படுகிறது. இருமொழிக்கொள்கையில் ஏதேனும் மாற்றி இருக்கிறோமா? இந்தியாவிலேயே மிகவும் முக்கியமான FCRA மசோதாவிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது தமிழ்நாட்டில் மட்டும் தான். வேறு எந்தவொரு மாநிலமும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அதை தனி தீர்மானமாக கொண்டு வந்தார்.

சோஃபா என்றாலே எதிர்ப்பு

எப்படி வக்பு வாரிய திருத்தச் சட்டம் கொண்டு வந்தபோது, திமுக அரசு கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியதோ, அதேபோல் தான் FCRA மசோதா மீது தவெக அரசு செயல்பட்டுள்ளது. கேட்டால் இது சோஃபா மாடல், அது திராவிட மாடல் என்கின்றனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சட்டசபையில் இது குறித்து பேச சோஃபா என தொடங்கினாலே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கிராமத்தில் நான் ஒரு வெள்ளை சட்டை போட்டால், என்ன இவன் வெள்ளை சட்டை போட்டு இருக்கிறான் என்பார்கள். புதுசா வீடு வாங்கினால், கார் வாங்கினால் இவனுக்கு எல்லாம் வந்த வாழ்வை பாரு என்பார்கள். அதேபோன்று தான் எங்கள் வீட்டில் புதியதாக ஒரு சோஃபா வந்தால் இவனுக்கு வந்த வாழ்க்கையை பாரு என்கிறார்கள். இந்த பார்வைக்கும், அந்த பார்வைக்கும் என்ன வித்தியாசம் என நான் கேட்கிறேன்.

நாங்கள் சோஃபா வாங்கக் கூடாதா?

நாங்கள் வாங்கக் கூடாதா? எல்லோருக்கும் சோஃபா என்பது தான் திராவிட மாடல். நீங்க மட்டும் வைத்துக்கொண்டால்? அதையும் ஒரு உள்நோக்கத்தோடு பேசுகின்றனர். எல்லோரையும் உட்கார வைக்க வேண்டும், எல்லோருக்கும் துண்டு போட வேண்டும். எல்லோருக்கும் சால்வை போட வேண்டும். அது தான் சமத்துவம். உங்க வீட்டில் மட்டும் சோஃபா வாங்கலாம், நாங்கள் ஒரு சோஃபா வாங்கினால் மட்டும் ஒரு கதை கட்டுவதா? சமத்துவத்தை நோக்கி போக வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இப்போதெல்லாம் திமுக தோழர்கள், ஆதரவாளர்கள் பாஜகவை அம்பலப்படுத்துவதை காட்டிலும் விசிகவை விமர்சிப்பதிலேயே தீவிரம் காட்டுகின்றனர். அதுவே முழு நேர வேலையாக மாறிவிட்டது.

இதையும் படியுங்கள்: TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை

திமுகவிற்கு விசிக மீது முழு கவனம் - வன்னியரசு

விடுதலை சிறுத்தைகள் என்ன செய்கின்றன? அமைச்சர் என்ன செய்கிறார்? சமூக நீதிதித்துறையில் என்ன நடைபெறுகிறது? உனக்கு எதிரி அங்கு இருக்கிறான் அங்கு சென்று பேசுவதில்லை. நாங்கள் இப்போது தான் அமைச்சராகி இருக்கிறோம். 100 நாட்களில் என்னென்ன செய்து இருக்கிறோம் என்பதை சாதனை பட்டியலாக போட்டுள்ளோம். ஆனால் அதை விட்டுவிட்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவாரை தொடுவதில்லை. மாறாக திமுகவிற்கு ஆதரவாக உள்ள யூட்யூப் சேனல்கள் அனைத்தும் சமூக நீதித்துறை அலுவலகத்தை நோக்கியே முழு நேரமும் கேமராவை வைத்துள்ளன. அப்போது உங்கள் நோக்கம் என்ன? எதைநோக்கி செல்கிறது திமுக? ” என அமைச்சர் வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: Read Full Article