Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க

Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
News Image

சமூக நீதித்துறையின் அமைச்சர் வன்னியரசு இன்று சட்டமன்றத்தில் சமூகநீதித்துறை மீது மானியக்கோரிக்கை மீது பேசினார்.

பரிதாபமா? கோட்பாடா?

அப்போது, அவர் பேசியதாவது,

நான் இந்த அவையில் கேட்க வேண்டிய கேள்வி என்பது நீங்கள் ( திமுக) இதை கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறீர்களா? அல்லது பரிதாபத்தின் அடிப்படையில் பச்சாதாபாத்தின் அடிப்படையில் பேசுகிறீர்களா? இதை சொல்கிறீர்களா என்ற கேள்வியை முன்வைக்கிறேன்.

பச்சாதாபம், பரிதாபம் அடிப்படையில் தலித்துகள், ஆதிதிராவிடர்களை நீங்கள் பார்ப்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக, திமுக எம்எல்ஏ-க்கள் கூச்சல்:

ஆனால், அப்போது எதிர்தரப்பில் இருந்த திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள் பெரும்பாலான உறுப்பினர்கள் எழுந்து நின்று கடுமையாக கூச்சலிட்டனர்.

வன்னி அரசு @VanniTamizhVCK வெளுத்து விட்டார் 75 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சியை! இதுதான் இவர்களுடைய சமூக நீதி 🔥

எங்களைப் பேசக்கூட விடமாட்டீங்க. இதுதான் உங்கள் சமூக நீதியா? 😢

பேச விடாமல் தடுப்பதே ஒரு வகையான ஒடுக்குமுறைதான்! 💯 pic.twitter.com/ZS6OXLqJnl
— TVK SANTHOSH (@santhosh_Tvk24) August 27, 2026

அப்போது, மீண்டும் பேசிய வன்னியரசு, தலித்துகளை பேசவிடாமல் இதுதான் நீங்கள் செய்கிற காரியமா? நான் முழுமையாக பேசுவதற்கு அனுமதி வேண்டும். நான் முழுமையாக பேச வேண்டும் என்றார்.

அப்போது, சபாநாயகர் கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்களிடம் அவரைப் பேசவிடுங்கள். அவர் பேசி முடித்த பிறகு கேளுங்கள். அவரது துறை சார்ந்த மானியக்கோரிக்கை. அந்த துறை சார்ந்த அமைச்சர் பேசட்டும். என்னவென்று கேளுங்கள் என்றார். ஆனாலும், திமுக - அதிமுக எம்எல்ஏ-க்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர்.

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு:

அப்போது மீண்டும் பேசிய அமைச்சர் வன்னியரசு, நான் இப்போதுதான் பேசவே ஆரம்பிக்கிறேன். தயவு செய்து என் குரலும் இந்த அவையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்கு முன்பு நான் பேசிய பேச்சுகள் வேறு. இந்த துறை சார்பாக நான் பதில் சொல்ல வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தில் குறைகளை, தேவைகளை கேட்க வேண்டியது இருக்கிறது.

இது கோட்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது? என்றால் கடந்த முறை 4 எம்எல்ஏ-க்கள் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இதே அவையில் இருந்தோம். இன்று 2 எம்எல்ஏ-க்கள்தான்  உள்ளோம். ஆனால், ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதுதான் கோட்பாடு.

4 உறுப்பினர்கள் இருந்தபோது கூட ஒரு அமைச்சரவையில் நீங்கள் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் கோட்பாட்டின் அடிப்படையில் பேசவில்லை. பச்சாதாபாத்தின் அடிப்படையிலே பேசுகிறீர்கள் என்ற செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இன்று அமைச்சரவைக்கு வந்த பிறகு சோபா மாடல் என்ற குறியீடு சொல்லப்படுகிறது. சோபா மாடல் நீங்கள் சொன்னீர்கள். நான் சொல்ல வேண்டாமா? நான் தென்மாவட்டத்தில் இருந்து சாதிக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வந்த ஒருவன் நான். அந்த பாதிப்பில் இருந்து சென்னைக்கு வந்துள்ளேன்.

திருமாவளவன் ஒரு குழந்தையை அழைத்து பள்ளிக்கு வருவது போல என்னை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார். இன்று சாதிய அணுகுமுறை எப்படி இருக்கிறது? கிராமங்களில் வெள்ளை சட்டை போட்டு வந்தால் இவனுக்கு வந்த வாழ்வைப் பார் என்பார்கள். புதிய காரில் வந்தால் இவனுக்கு வந்த வாழ்வைப் பார் என்பார்கள்.

இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே திமுக உறுப்பினர்கள் கூச்சலிடத் தொடங்கினர்.

இதுவே ஒடுக்குமுறை:

தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் அமைச்சர் வன்னியரசால் தொடர்ந்து தனது கருத்தை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நான் பேசி முடித்த பிறகு அவர்களுக்கு அனுமதி கொடுங்கள் என்று வன்னியரசு சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், தொடர்ந்து எதிர்தரப்பில் கூச்சல் வந்ததால் அவரால் பேச இயலவில்லை. இதுவே ஒரு ஒடுக்குமுறை என்று அமைச்சர் வன்னியரசு அதிருப்தியுடன் தனது உரையை முடித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks