இந்தியாவில் இரண்டு வகையான ஆதார் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஒன்று 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பால் ஆதார், மற்றொன்று பெரியவர்களுக்கு வழங்கப்படும் ஆதார் கார்டு. இந்த இரண்டிலுமே நம் விவரங்களை அப்டேட்டாக வைத்திருப்பது கட்டாயம்.

குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்கப்பட்ட பால் ஆதார் அட்டையில் அவர்கள் 5 வயதினை எட்டிய பிறகு பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டும். அந்த வகையில் குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் அப்டேட் சேவைகளை ஆதார் அமைப்பு இலவசமாக வழங்கி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 2 கோடி பள்ளி மாணவர்களின் ஆதார் பயோ-மெட்ரிக்கை புதுப்பித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பால் ஆதார் கார்டில் குழந்தைகளின் கைவிரல் ரேகை, கருவிழி படல்ம் உள்ளிட்ட தகவல்கள் இருக்காது. அவர்களுக்கு 5 வயதான பிறகே இது எடுக்கப்படும். இதுவும் 7 வயதுக்குள் எடுக்க வேண்டும். அப்படி ஆதாரை அப்டேட்டாக வைத்திருந்தால் தான் நுழைவு தேர்வு, அரசின் ஊக்கத்தொகை உள்ளிட்டவை கிடைக்கும். எனவே தான் ஆதார் அமைப்பு வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி வரை, குழந்தைகளின் பயோமெட்ரிக்களை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

தற்போது பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்களின் பயோமெட்ரிக் அப்டேட் செய்யும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து இதுவரை 1.56 லட்சம் பள்ளிகளில் ஆதார் புதுப்பிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 2 கோடி மாணவர்களுக்கு ஆதார் பயோ மெட்ரிக் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு, செப்டம்பர் 30ஆம் தேதி வரை பயோமெட்ரிக்கை புதுப்பிக்க எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என யுஐடிஏஐ அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக்கை நாம் இணையவழியாக அப்டேட் செய்ய முடியாது. குழந்தைகளை பெற்றோர் ஆதார் மையத்துக்கு அழைத்து சென்றுதான் புதுப்பிக்க முடியும்.

எனவே அருகில் உள்ள ஆதார் மையத்தை புவன் ஆதார் போர்டல் (Bhuvan Aadhaar Portal) மூலம் கண்டறியலாம். அங்கே ஆதார் அட்டையை அப்டேட் செய்ய குழந்தைகளின் ஆதார் அட்டையுடன், குழந்தையையும் ஆதார் மையத்துக்கு பெற்றோர் அழைத்து செல்ல வேண்டும். அங்கே குழந்தைகளின் கைரேகைகள், கருவிழிப படலம் மற்றும் புகைப்படம் ஆகியவை பதிவு செய்யப்படும். இந்த அப்டேட்டை அடுத்து 15 நாட்களில் புது ஆதார் அட்டை வீட்டிற்கே வந்துவிடும். நம் ரேஷன் கார்டில் குழந்தைகள் பெயரை இணைப்பது தொடங்கி, ஸ்கூல் அட்மிஷன் ,ஸ்காலர்ஷிப், போட்டி தேர்வுகள் வரை ஆதார் முக்கிய ஆவனமாக கேட்கப்படுகிறது. எனவே இதனை புதுப்பித்து கொள்வது நல்லது.

Source: Read Full Article