Udhaynidhi Stalin: கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு

Udhaynidhi Stalin: கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு
News Image

Udhaynidhi Stalin: கொளத்தூர் தொகுதி தோல்விக்கு என்ன காரணத்தை சொன்னாலும் ஏற்க முடியாது என, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

எதிரியை அறியாமல் சண்டை போட்டோம் - உதயநிதி

சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசுகையில்,, “ஆளுங்கட்சியாக இருப்பவர்களை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. எல்லோரும் நேரலையில் தொலைக்காட்சியில் பார்த்துகொண்டு இருக்கிறீர்கள்.  இன்று ஆளுங்கட்சியாக இருக்கக் கூடியவர்கள் எப்படி இந்த நிலைமைக்கு வந்தார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். தேர்தலில் நாம் எதிர்பார்த்தது ஒரு பெரிய வெற்றி. திராவிட மாடல் 2.0 அமையும் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், தேர்தலில் நம்முடைய எதிரி யார் என்பதையே அறியாமல் சண்டை போட்டுவிட்டோம். இன்று நமது எதிரி யார் என தெரிந்துவிட்டது. மீண்டும் அந்த தவறை நாம் செய்ய மாட்டோம். செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சேகர் பாபு மீது கோபம்?

குறிப்பிட்டு சொன்னால் சென்னை கிழக்கு மாவட்டத்தில் மாதம் ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்று இருக்கிறேன். ஆனால் ஒரு சிறிய இடைவேளை. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த மாவட்டத்திற்கு நான் வந்து இருக்கிறேன். சேகர்பாபு நினைத்து கொள்ளலாம் நான் அவர் மீது கோபமாக இருக்கிறேன் என்பதால் வரவில்லை என்று. அவர் மனதில் தோன்றி இருக்கலாம். அது கோபமில்லை. அது வருத்தம். வருத்தம் மட்டும் இல்லை. அவர் மீதும் இந்த சென்னை கிழக்கு மாவட்டத்தின் மீதும் எனக்கு உள்ள உரிமை. எத்தனையோ காரணங்களை சொல்லலாம். வெற்றி வாய்ப்பை நாம் இழந்ததற்கு எத்தனையோ காரணங்களை தேடி கண்டுபிடித்துவிடலாம். சினிமா மாயை, கவர்ச்சி, இளந்தலைமுறையினர் சமூக வலைதளங்களிலும், போன்களிலும் முழுக்க முழுக்க கவர்ச்சியால் இழுக்கப்பட்டதால்,  திராவிட மாடலின் திட்டங்கள் இளம் தலைமுறையினரிடம் சென்று சேரவில்லை. அதனால் இந்த வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம் என எத்தனையோ காரணங்களை சொல்லி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.

கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம்?

ஆனால், யார் எவ்வளவு சொன்னாலும் கொளத்தூர் தொகுதி தோல்வியை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அந்த தோல்வியை தயவு செய்து யாரும் மறந்துவிட கூடாது. இதை நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய பாடமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த தேர்தலில் இந்த தோல்விகளை எல்லாம் மிகப்பெரிய வெற்றிகளாக மாற்ற வேண்டும். இதை நிச்சயமாக கிழக்கு மாவட்டம் செய்துகாட்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்றைக்கு ஆட்சியாளர்கள் ஆட்சியை பிடித்து இருக்கலாம், முதலமைச்சர் ஆகி இருக்கலாம். ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அவர்களுக்கே ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இல்லை. ஒரு மிகப்பெரிய விபத்து போல இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதையும் படியுங்கள்: TN Weather News: இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை

ஸ்டாலின் போட்ட பிச்சை..!

இன்னும் சொல்லபோனால் மக்கள் முழுமையாக அவர்களை தேர்ந்தெடுக்கவில்லை. பெரும்பான்மையோடு இருக்கிறார்களா? என்றால் அதுவும் கிடையாது. ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் வெறும் 108 இடங்களில் தான் வென்றார்கள். இன்னும் சொல்லப்போனால் நம்முடைய தலைவர் பெயரை சொல்லி நம்முடைய உடன்பிறப்புகள் களத்தில் வேலை பார்த்ததன் விளைவாக வெற்றி பெற்றவர்களின் தயவில் தான் இந்த ஆட்சி நடந்துகொண்டுள்ளது. தைரியமாக சொல்லலாம். நம்முடைய தயவில் தான் இந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டுள்ளது. ஸ்டாலின் போட்ட பிச்சையில் தான் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது” என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks