Udhayanidhi Stalin: பெண்கள் பற்றி வக்கிர சிந்தனை.. நள்ளிரவில் உதயநிதியை விளாசிய அமைச்சர்கள்!

Udhayanidhi Stalin: பெண்கள் பற்றி வக்கிர சிந்தனை.. நள்ளிரவில் உதயநிதியை விளாசிய அமைச்சர்கள்!
News Image

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தவெக அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

உதயநிதி பேச்சுக்கு குவியும் கண்டனம்

விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரம் தொடர்பாகவும் திமுக சார்பில் தஞ்சாவூரில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் சர்ச்சையில் சிக்கினார். கூட்டத்தில் இருந்த சிலர் நடிகை த்ரிஷா பெயரை சொல்லி கூச்சலிட, பதிலுக்கு இரட்டை அர்த்தத்தில் உதயநிதி ஸ்டாலின் கருத்து ஒன்றை சொன்னார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. பலரும் உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தவெக அரசா? பதவி விலக கூட தயார்” வன்னி அரசு பரபரப்பு INTERVIEW" src="https://www.youtube.com/embed/kvOXPCC7e4g" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

அறிவாலயத்தை அழிக்கும் ஆபாசநிதி

அந்த வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட பதிவில், “அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி.. இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் உதயநிதி. அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார். பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று  அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் திமுகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Also Read: முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!

பெண்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்

இதேபோல அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள பதிவில், “பொது மேடைகளில் பேசப்படும் வார்த்தைகள் அரசியல் நாகரிகத்தையும், சமூகப் பொறுப்பையும் பிரதிபலிக்க வேண்டும்.  ஆனால் உதயநிதி பேசிய பேச்சு, பெண்களின் கண்ணியத்தையும், சமூகத்தின் நாகரிக விழுமியங்களையும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.கருத்து வேறுபாடுகள் அரசியலில் இயல்பானவை. ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலோ, இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளாலோ, ஆபாசமான மொழியாலோ கருத்துகளை வெளிப்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல் மேடை என்பது மக்களுக்கு வழிகாட்டும் இடமே தவிர, பெண்களின் மாண்பைக் காயப்படுத்தும் வார்த்தைகள் ஒலிக்கும் இடமாக மாறக் கூடாது.பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் மொழிக்கு தமிழ்நாட்டின் பெண்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். பெண்களின் கண்ணியத்தை காயப்படுத்தும் இதுபோன்ற பேச்சுகளுக்கு ஜனநாயக ரீதியாக தக்க பதிலை தமிழக பெண்கள் வழங்குவார்கள்” என விளாசியுள்ளார்.

நாளை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் இந்த பேச்சு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks