Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!

Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
News Image

சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்த எம்.எல்.ஏ.க்களுக்கான காரை திமுக பெறாது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். திமுக எம்.எல்.ஏ.க்கள் 59 பேரும் அந்த கார்களைப் பெற மாட்டார்கள். தேர்தல் பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவரங்கள் அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கார் கொடுத்தால் போதும். இதற்கான கையெழுத்திடப்பட்ட கடிதங்களை சபாநாயகரிடம் அளிக்கிறோம்” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “முதலமைச்சரின் நோக்கம் இதே சட்டமன்றத்தில் ஏழ்மையாக இருக்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி சட்டமன்றத்திற்கு பேருந்தில் தான் வந்து செல்கிறார். அவர் வைத்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் விஜய் அவையைப் பொறுத்தவரை அனைவரும் சமம் என்பதைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் என அறிவித்துள்ளார். இங்கு பெரும்பாலனவர்களிடம் கார் இருக்கிறது. யார் ஏழ்மையாக இருக்கிறார்களோ, யாரிடம் கார் இல்லையோ அவர்கள் தான் கேட்கப் போகிறார்கள். இது ஒரு அடிப்படை புரிதல். தவெகவில் கார் இருப்பவர்களும் இதில் கேட்கப் போவதில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் 2,3 வீடுகள் உள்ளது. அப்படியிருக்கும்போது அவர் அரசு பங்களாவில் தான் இருக்கிறார். எனக்கு அரசுத்துறையின் பங்களா வேண்டும் என என்னிடம் தான் கடிதம் கேட்டார். இது அடிப்படை உரிமை. புரோட்டாகால் அடிப்படையில் அமைச்சர்களுக்கு வீடு, கார், உதவியாளர் கொடுக்கப்படுகிறது. ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கு உதவியாளர், கார் எதுவும் இல்லை. தேர்தல் பத்திரத்தில் கார் இல்லை, வீடு இல்லை, ரூ.10 ஆயிரம் பணம் இருக்குன்னு கூட சொல்லலாம்.

முதலமைச்சர் பொதுவாக ஒரு அறிவிப்பை கொடுக்கிறார். கார் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் விண்ணப்பிக்க மாட்டார்கள் என்பது அந்தந்த கட்சியின் நிலைப்பாடாக இருக்கலாம். கார் என்பது ஆடம்பரம் இல்லை. மக்களை பார்க்க கார் தேவை என்பது தான் நோக்கம் என சொன்னார்.

இதற்கு பதில் சொன்ன முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து உள்ளவர். அதனால் அரசு வீடு தருகிறது. எனவே உதயநிதி அந்த வீட்டில் அமர்ந்து பணிகளை மேற்கொள்ள நினைக்கிறார். கார் வேண்டாம் என சொல்கிறோம். தேர்தல் பத்திரத்தில் நாங்கள் சொன்னது தப்புதான் என நினைத்தால் கேச் போடுங்களேன். என்ன இருக்கிறதோ அதைத்தான் சொல்ல முடியும். சொந்த வீட்டில் இருந்தால் கூட அமைச்சருக்கு அரசாங்கம் வாடகை கொடுக்கிறது. அதை வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே  என தெரிவித்தார். இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks