தமிழ்நாட்டின் சட்டமன்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஒவ்வொரு நாளும் அனல் பறக்கும் விவாதம் ஆளுங்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுக இடையே நடந்து வருகிறது.

அன்பில் மகேஷ் மீது லஞ்சப் புகார்:

இந்த நிலையில், இன்று உயர்கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை நடந்தது. அப்போது, நிதி அமைச்சர் மரியவில்சன் பேசும்போது கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சென்னை தி.நகரில் நடந்த சந்திப்பின்போது தன்னிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டினார். அமைச்சர் மரிய வில்சனே தன்னிடம் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டியிருப்பது மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அன்பில் விளக்கம்:

இந்த விவகாரத்திற்கு உடனடியாக விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்தேன், காெடுத்தேன் என்று அவர் கூறுவதே தவறுதானே? என்று கேள்வி எழுப்பினார். மேலும், தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.

அமைச்சராக இருந்து அவர் லஞ்சம் கொடுத்ததாக அவர் கூறியிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார். மரிய வில்சன் தன்னை கட்டாயப்படுத்தி அன்பில் மகேஷ் லஞ்சம் வாங்கியிருப்பதாக கூறியுள்ளார். தற்போது இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

கடந்த திமுக ஆட்சி மீது லஞ்ச குற்றச்சாட்டுகளை பல்வேறு தரப்பினரும் அடுக்கி வரும் நிலையில், சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி அமைச்சரே லஞ்சப் புகாரை கூறியிருப்பதால் இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு லஞ்சம் வாங்கியிருந்தால் எவ்வளவு தொகை வரை லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது? எத்தனை பள்ளிகளிடம் வாங்கப்பட்டுள்ளது? என்றும், மரியவில்சன் லஞ்சம் கொடுத்திருந்தால் எவ்வளவு கொடுத்துள்ளார்? அவரை கட்டாயப்படுத்தியதற்கான ஆதாரங்கள்? இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்றும் சரமாரியாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால், இன்னும் சில நாட்களில் இந்த விவகாரம் பெரியளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்று கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கை எப்படி இருக்கப்போகிறது? என்றும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

Source: Read Full Article