TVK Vs DMK Delimitation Resolution: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தீர்மானம்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முன்பு வரை மத்தியில் ஆளும் பாஜகவை, திமுக கடுமையாக விமர்சித்து வந்தது. கடைசி நேரத்தில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை வீழ்த்துவதில் முக்கிய பங்கு வகித்ததோடு, அதன் நகலை எரித்து தீ பரவட்டும் என ஸ்டாலின் சூளுரைத்தார். ஆனால், தற்போது தேர்தலுக்கு பிறகு திமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. மத்திய அரசு மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை கடந்த முறை தீவிரமாக எதிர்த்து வந்த திமுக தற்போது, உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் மழுப்பலாக பேசி வருகிறது. இந்நிலையில் தான், திமுகவிற்கு செக் வைக்கும் விதமாக மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக, முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் தனி தீர்மானம் தாக்கல் செய்கிறார்.

திமுகவிற்கு செக்..!

மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி திமுக தான் என்று அந்த கட்சியினர் தொடர்ந்து உரைத்து வருகின்றனர். அதேநேரம், தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டால் பாஜகவிற்கு சாதகமான நிலைப்பாட்டை முன்னெடுப்பது என திமுக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், மத்திய அரசின் நட்பு கட்சியாக மாறி, மாநிலத்தில் தவெக அரசு குடைச்சல் கொடுக்கலாம் எனவும் திட்டமிடுகிறதாம். இதற்கு செக் வைக்கும் விதமாக தான், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக்கட்சி எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், திமுக கூட்டணி எம்பிக்கள் மற்றும் அதிமுக எம்பிக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுத்ததால் தான், திமுக மற்றும் அதிமுக கூட்டத்தை புறக்கணித்ததாக விமர்சிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை இப்படியே விடாமல் திமுகவின் நிலைப்பாட்டை வெளியே கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற உறுதியில் தான், இன்று தனித்தீர்மனம் ஒன்றை தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது.

எஸ்கேப் ஆகுறிங்களோ? - திமுகவிற்கு CM விஜய் ஸ்கெட்ச்

அண்மைக்காலமாக தொகுதி மறுவரையறை தொடர்பாகவும், பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்தும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு, “மசோதா தாக்கல் செய்யப்பட்டால் படித்து விட்டு சொல்கிறோம், தமிழ்நாட்டிற்கு எது நல்லதோ அதையே செய்வோம், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை” என்பது போன்ற பதில்களை திமுகவினர் வழங்கி வருகின்றனர். இதனால், ஆட்சியில் இருந்தவரை பாஜகவை காங்கிரசை விட தீவிரமாக எதிர்த்து வந்த திமுக, இன்று தங்களது சுயநலனுக்காக மத்திய அரசிடம் சரணடைய முடிவு செய்துவிட்டதாக தவெகவினர் கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை பொதுமக்களை அறிய செய்ய வைக்க வேண்டும் என்பதற்காகவே இன்றைய தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை ஆதரித்தாலும் சரி, எதிராக வாக்களித்தாலும் சரி இரண்டையும் தங்களுக்கான சாதகமாக மாற்ற தவெக திட்டமிட்ட்ய்ள்ளதாம்.

இதையும் படியுங்கள்: https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-rain-alert-chennai-weather-forecast-tn-today-meteorological-department-warning-august-12th-rain-alert-270864

தவெக அரசின் திட்டம் என்ன?

தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஒவ்வொரு கட்சியின் சார்பிலான பிரதிநிதிகளும் விவாதத்தில் பங்கேற்று தங்களது கருத்தினை தெரிவிப்பார்கள். பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும். அந்த வகையில் தீர்மானத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தால், மூன்றே மாதங்களில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். மாநில உரிமைகளுக்கான கட்சி என்ற விளம்பரம் எல்லாம் பொய்யா? என பொதுமக்களும் கேள்வி எழுப்பக்கூடும். ஒருவேளை தீர்மானத்திற்கு ஆதரவளித்தால், ஒட்டுமொத்த கட்சிகளையும் மாநில உரிமைகளுக்காக ஒருங்கிணைத்தவர் என முதலமைச்சர் விஜயை முன்னிலைப்படுத்த தவெக தயாராகி வருகிறது. அதோடு, பாஜகவின் கோபத்திற்கும் திமுக ஆளாகி, தமிழ்நாட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் தீவிரமடையக்கூடும்.

Source: Read Full Article