TVK Vs DMK: "கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?

TVK Vs DMK: "கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
News Image

TVK Vs DMK: முதலீட்டு விவரங்களை மதிப்பிடும்போது மாநில அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான வழிகாட்டி நிறுவனம் வெளியிடும் தரவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.

"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு"

முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் முதலீடுகள் சரிந்துவிட்டதாகவும், தேசிய அளவில் தனியார் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து இருப்பதாகவும் திமுகவின் ஐடி விங் குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு தவெகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “கொத்துஸ் ஐடி விங் கவனத்திற்கு. பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை குறித்து சில உண்மைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. முதலில், அந்தக் கட்டுரை முழுவதும் ப்ராஜெக்ட்ஸ் டுடே (Projects Today) என்ற தனியார் இணையதளத்தின் தரவுகளை கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் முழுமையாகவும், தற்போதைய நிலவரத்திற்கேற்பவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

திமுக Vs தவெக - முதலீடுகளை ஈர்த்தது யார்?

தமிழ்நாட்டில் மாநில முதலீடுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை பராமரிக்கும் அரசின் முதலீட்டு நிறுவனம் முகமையான வழிகாட்டி வெளியிடும் தரவுகளே நம்பகமானவை. தவெக அரசு பொறுப்பேற்ற முதல் காலாண்டிலேயே தனது முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) L&T குழுமத்துடன் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரூ.18,600 கோடி முதலீடு, 8,200 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகிறது. இதே நேரத்தில், முந்தைய திமுக அரசு தனது முதல் காலாண்டில் (Q1 FY21) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட கையெழுத்திடவில்லை என்பது அதிகாரப்பூர்வ பதிவுகளில் உள்ளது. எனவே, தவெக அரசின் செயல்பாடு குறித்த தவறான தகவல்களை பரப்பும் முயற்சிகள் உண்மைக்கு புறம்பானவை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. அதுமட்டுமல்ல, திமுக அரசு தனது முதல் ஆறு மாதங்களில் (H1 FY21) மொத்தம் ₹21,021.54 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டது. ஆனால் TVK அரசு வெறும் 50 நாட்களிலேயே அந்த அளவை எட்டும் வகையில் வேலை செயல்பட்டுள்ளது.

முதலீட்டில் சாதனை..!

மேலும், 2026 ஜூலை மாதத்தில் Hitachi Energy, Vikram Solar, Chubb, Nordex, MotiveLink, University of Western Australia உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், இதுவரை தவெக அரசு ரூ.35,062 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. இது முந்தைய அரசின் செயல்திறனை ஏற்கனவே கடந்துவிட்டது என்பதையே அதிகாரப்பூர்வ தகவல்கள் காட்டுகின்றன. மேலும், 2026 செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் முதல் அரையாண்டிற்குள் இந்த முதலீட்டு எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன்பிறகு, தவெக அரசின் முதலீட்டு ஈர்ப்பு சாதனை மேலும் வலுவாக வெளிப்படும்.

எனவே, ப்ராஜெக்ட்ஸ் டுடே இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.7,143.23 கோடி என்ற முதலீட்டு விவரம் முழுமையற்றதும், தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்களுடன் பொருந்தாததுமாகும். முதலீடு தொடர்பான விவரங்களை மதிப்பிடும்போது மாநில அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான வழிகாட்டி நிறுவனம் வெளியிடும் தரவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்: TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை

திமுகவின் குற்றச்சாட்டுகள் என்ன?

திமுக வெளியிட்டு இருந்த அறிக்கையில், “மாநிலத்தில் வெளிநாட்டு தனியார் முதலீட்டு முன்மொழிவுகள், 2025-26 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ.2,080 கோடியாக இருந்த நிலையில், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் வெறும் ரூ.720 கோடியாக சரிந்துள்ளது. தனியார் முதலீட்டில் ஏற்பட்டுள்ள இந்த 77.63% சரிவானது, சாத்தியமான கொள்கை நிச்சயமற்ற தன்மை, நிர்வாகத் தாமதங்கள் அல்லது தெளிவான தொழில்துறை தொலைநோக்குப் பார்வை  இல்லாமை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது” என குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. ஆனால், இதில் தவறான புள்ளி விவரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தவெக அரசு விளக்கமளித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks