முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக (TVK) அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை (2026-27), நிதியமைச்சர் என். மரிய வில்சன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் மிக முக்கியமான டாப் 10 சிறப்பம்சங்கள் மற்றும் அறிவிப்புகள்:

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2026 ( tamilnadu budget 2026 )

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார். தவெக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு முன்னெடுக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள், ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள், அரசு நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புகள் போன்றவை பட்டியலிடப்பட்டன. மேலும், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான கூடுதல் சிறப்பு கட்டணம் பதிவுத்துறையில் நேரடியாக வர வேண்டிய அவசியமின்மை மற்றும் சுரங்க நடவடிக்கைகள் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் மாநிலத்திற்கு கூடுதலாக சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

இந்த பட்ஜெட்டின் மிக முக்கியமான டாப் 10 சிறப்பம்சங்கள் மற்றும் அறிவிப்புகள்:

பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம், 1 பட்டுப்புடவை

பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்துக்கு ரூ.812 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு. அனைத்து பெண்களுக்கும் பொருந்துமா? அல்லது யாருக்கெல்லாம் பொருந்தும்? எனக் குறிப்பிடப்படவில்லை.

தாய்மாமன் தங்க மோதிடம் திட்டம்.. ரூ.560 கோடி ஒதுக்கீடு.!

'தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட'த்தின்படி அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் விதமாக தாய்மாமன் சீர் என்ற முறையில் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் இந்த தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதுடன் ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 22 (விஜய் பிறந்த நாள்) முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பயணம் புதிய வேகம் திட்டம்

11ஆம் வகுப்பு மாணவர்கள் 5.32 லட்சம் பேருக்கு ஹெல்மெட், வாட்டர்பாட்டில் வ்பசதியுடன் ரூ.277 கோடி மதிப்பில் சைக்கிள் வழங்கப்படும்

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம்

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம் – கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 110 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். கால்நடைகள் காப்போம் திட்டம் தொடக்கம். எதிர்பாராத இழப்புகளிலிருந்து விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பு வழங்கப்படும்.புதிய கால்நடை காப்பீடு திட்டத்திற்கு ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு

கர்ப்பிணி பெண்களுக்கு குட்நியூஸ்.. தாய் கேர் திட்டம் அறிவிப்பு.!

கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும். மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன்பெறலாம். கட்டணமில்லா உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தொடர் மருத்துவ கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் மொத்தம் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு

12 மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள் நிறுவப்படும்

12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். மூத்த குடிமக்களுக்கு பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும். நூலகம், யோகா, தியானம், உள்ளரங்க விளையாட்டு வசதிகள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் அமைக்கப்படும். ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.

வெற்றி திறன் பயிற்சித் திட்டம்

12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் 1 லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, அரசு & தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முதற்கட்டமாக 20,000 இளைஞர்களுக்கு பணியிடப் பயிற்சி, பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும். நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வெற்றி லேப்டாப் திட்டம் (Vetri Laptop Scheme):

மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் வகையில் 'வெற்றி லேப்டாப் திட்டம்' உருவாக்கப்பட்டு, இதற்காக 2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அரசு சட்டக்கல்லூரி

தென் மாவட்ட மாணவர்களின் பயன்பாட்டிற்காக மதுரையில் 300 மாணவர்கள் சேர்க்கை வசதியுடன் கூடிய புதிய அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும்.

சூப்பர் க்ளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம்

அரசு பள்ளிகளில் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது மாணவர்களின் நலனுக்கு அவசியமானதாகும். சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் கழிவறை பராமரிப்பு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

பள்ளி பாடத்திட்டத்தை சீரமைக்க ரூ25 கோடி ஒதுக்கீடு

பள்ளி பாடத்திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, போதைப்பொருள் மற்றும் அதன் தவறான பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 10581 என்ற எண் பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும். இதை செயல்படுத்த ரூ7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Source: Read Full Article