முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்துள்ள தமிழக பட்ஜெட்டின் டாப் 10 ஹைலைட்ஸ் என்னென்ன? இதோ லிஸ்ட்!

அண்ணனின் சீர் திட்டம்

பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயமும் பட்டுப் புடவையும் வழங்கப்படும். இதற்காக 812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

மாணவர்களுக்கு சைக்கிள்

11ஆம் வகுப்பு அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட், தண்ணீர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும்.

வெற்றி மடிக்கணினித் திட்டம்

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்புகள் அளிக்கப்படும். இதற்கென ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம், கறவை மாடுகள்

30 ஆயிரம் பேருக்கு இலவச ஆடுகள் வழங்கப்படும். இதில் பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் பயன்பெறுவர். அதேபோல 10 ஆயிரம் பெண்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக கறவை மாடுகள் வழங்கப்படும்.

தாய்மாமன் தங்க மோதிரம்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு.

பொது EV சார்ஜிங் நிலையங்கள்

5 ஆண்டுகளில் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கென ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சோலார் பேனல் அமைக்க மானியம்

தமிழ்நாடு வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டத்தின்கீழ் 'வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்' அறிமுகம்.

சூரிய மின்பலகைக்கு ரூ.1 இலட்சம் வரை மானியம், இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

ஏஐ திறன் பயிற்சி

2031 ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 இலட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும். இந்தியாவின் முதல் ஏஐ நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறை ஆய்வு செய்ய ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

1000 ஏசி மின்சார பேருந்துகள்

சென்னையில் 1000 ஏசி மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதற்கென ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Source: Read Full Article